இந்தியாவில் ₹54,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13S போன், தற்போது அமேசான் விற்பனையில் நேரடியாக ₹4,000 குறைக்கப்பட்டு ₹50,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, குறிப்பிட்ட வங்கிகளின் அட்டைகளைப் (Bank Card) பயன்படுத்தி வாங்கும் போது, கூடுதலாக ₹3,250 வரை உடனடித் தள்ளுபடி (Bank Discount) வழங்கப்படுகிறது. இந்த அனைத்துச் சலுகைகளையும் இணைத்தால், இந்த ஃபோனின் ஆரம்ப விலை வெறும் ₹47,749 ஆகக் குறைகிறது. மேலும், உங்கள் பழைய போனை மாற்றிக்கொள்ள பரிமாற்றச் சலுகை (Exchange Offer)-ம் இதில் கிடைக்கிறது.