ஹெட்போன் இருக்கா? இனி எந்த மொழியும் பேசலாம்.. கூகுள் டிரான்ஸ்லேட் அதிரடி அப்டேட்!

Published : Dec 15, 2025, 08:15 PM IST

Google Translate கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் ரியல் டைம் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம்! ஹெட்போன் மூலம் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
Google Translate

வேற்று மொழி பேசும் நபர்களுடன் உரையாடுவது அல்லது வெளிநாட்டு செய்திகளைப் புரிந்துகொள்வது இனி மிகவும் எளிதாகப்போகிறது. கூகுள் நிறுவனம் தனது 'கூகுள் டிரான்ஸ்லேட்' (Google Translate) செயலியில் ஒரு புதிய பீட்டா வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் ஹெட்போன்கள் வழியாகவே நிகழ்நேர (Real-time) மொழிபெயர்ப்பைக் கேட்க முடியும். இந்த புதிய வசதி குறித்த முழு விவரங்களை இங்கே காண்போம்.

25
ஹெட்போன் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு

கூகுள் நிறுவனம் ஜெமினி ஏஐ (Gemini AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இது சாதாரண ஹெட்போன்களைக் கூட ஒரு மொழிபெயர்ப்புக் கருவியாக மாற்றுகிறது. நீங்கள் எந்த வகையான வயர் அல்லது வயர்லெஸ் ஹெட்போனைப் பயன்படுத்தினாலும் இந்த வசதி வேலை செய்யும். தற்போது 70-க்கும் மேற்பட்ட மொழிகளை இந்த வசதி ஆதரிக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு உரையாடல்கள், சொற்பொழிவுகள் அல்லது மீடியாக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

35
பேசும் தொனி மற்றும் உணர்வுகள் அப்படியே இருக்கும்

பொதுவாக ரோபோட்டிக் குரலில் மொழிபெயர்ப்பு இருப்பது வழக்கம். ஆனால், கூகுளின் இந்த புதிய தொழில்நுட்பம் பேசுபவரின் தொனி (Tone), அழுத்தம் மற்றும் வேகத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் யார் பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்பவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த பீட்டா வசதி தற்போது இந்தியா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஐபோன் (iOS) பயனர்களுக்கு 2026-ம் ஆண்டில் இந்த வசதி கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

45
பயன்படுத்துவது எப்படி?

இந்த புதிய ஹெட்போன் மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.

1. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் Google Translate செயலியைத் திறக்கவும்.

2. உங்கள் ஹெட்போனை போனுடன் இணைக்கவும்.

3. செயலியில் உள்ள "Live translate" (லைவ் டிரான்ஸ்லேட்) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

4. எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்.

5. இப்போது நீங்கள் கேட்பது தானாகவே உங்கள் ஹெட்போனில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிக்கும்.

பயணங்களின் போது அல்லது வெளிநாட்டுச் சொற்பொழிவுகளைக் கேட்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

55
ஜெமினி AI-யின் மேஜிக்

கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் மேம்பட்ட ஜெமினி AI திறன்களை இணைத்துள்ளது. இது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், அந்த இடத்திற்கு ஏற்றார் போல இயற்கையான மற்றும் சரளமான மொழிபெயர்ப்பை வழங்குகிறது. குறிப்பாக வட்டார வழக்குகள் (Slang) மற்றும் மரபுத் தொடர்களை (Idioms) இது துல்லியமாக மொழிபெயர்க்கிறது. உதாரணத்திற்கு "stealing my thunder" போன்ற ஆங்கில மரபுத் தொடர்களை, அதன் நேரடி அர்த்தத்தை எடுக்காமல், சூழலுக்கு ஏற்ப சரியான அர்த்தத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது.

புதிய கற்றல் கருவிகள்

மொழிபெயர்ப்பைத் தாண்டி, புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான கருவிகளையும் கூகுள் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியா உட்பட கிட்டத்தட்ட 20 நாடுகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஆங்கிலம் அல்லது பிற மொழிகளைப் பேசக் கற்றுக்கொள்ளலாம். டியோலிங்கோ (Duolingo) செயலியைப் போலவே, இதிலும் தினசரி கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிக்க 'ஸ்ட்ரீக் கவுண்டர்' (Streak counter) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories