Nano Banana Pro ஆண்ட்ராய்டு பயனர்களே ரெடியா? ஜெமினி 3 ப்ரோ பவருடன் களமிறங்கிய புதிய டூல்.. எப்படி பயன்படுத்துவது?

Published : Nov 22, 2025, 09:06 PM IST

Google Nano Banana Pro கூகுளின் Nano Banana Pro AI அறிமுகம்! 4K படங்கள் மற்றும் துல்லியமான எடிட்டிங் வசதி. இலவசமாக பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே.

PREV
16
கூகுளின் அடுத்த அதிரடி! நினைத்ததை படமாக வரையும் 'நானோ பனானா ப்ரோ' AI அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) நாளுக்கு நாள் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது புகைப்படங்களை உருவாக்குவதற்கும் (Image Generation), எடிட் செய்வதற்கும் ஒரு மிகச்சிறந்த கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'Nano Banana Pro' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த AI மாடல், கூகுளின் சக்திவாய்ந்த Gemini 3 Pro தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

26
Nano Banana Pro என்றால் என்ன?

இது கூகுளின் அதிநவீன இமேஜ் ஜெனரேட்டர் ஆகும். நாம் கொடுக்கும் எழுத்துப்பூர்வமான கட்டளைகளை (Text Prompts) இது அழகான புகைப்படங்களாக மாற்றிக் கொடுக்கும். பழைய வெர்ஷன்களை விட இது மிகவும் துல்லியமாகவும், கிரியேட்டிவ்வாகவும் இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

36
லைவ் அப்டேட் மூலம் படம் வரையும் மேஜிக்!

இதன் சிறப்பம்சமே இது 'Gemini 3 Pro' மூலம் இயங்குவதுதான். இதனால் கூகுள் தேடலில் (Google Search) உள்ள நிகழ்நேரத் தரவுகளை (Real-time data) இதால் எடுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, "இன்றைய வானிலைக்கு ஏற்ப ஒரு படத்தை வரைந்து கொடு" என்று கேட்டால், உங்கள் பகுதியின் வானிலையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் படத்தை உருவாக்கும். அதேபோல் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் அல்லது விளையாட்டு நிகழ்வுகளை வைத்தும் படங்களை உருவாக்கும் திறன் கொண்டது.

46
படங்களுக்குள்ளேயே டெக்ஸ்ட் எழுதலாம்!

பொதுவாக AI கருவிகளில் படங்களுக்குள் எழுத்துக்களைச் (Text) சேர்ப்பது கடினமாக இருக்கும். ஆனால், Nano Banana Pro இதில் கில்லாடி. தலைப்புகள் (Titles), கேப்ஷன்கள் மற்றும் நீண்ட பாரகிராப்களைக் கூட பிழையின்றி படங்களுக்குள் சேர்க்க முடியும். போஸ்டர்கள், சமூக வலைதள பதிவுகள் மற்றும் இன்ஃபோகிராபிக்ஸ் செய்ய இது மிகவும் உதவியாக இருக்கும்.

56
4K துல்லியமும், எடிட்டிங் அம்சங்களும்

இதில் உருவாக்கப்படும் படங்கள் 4K ரெசல்யூஷன் வரை மிகத் துல்லியமாக இருக்கும். மேலும், எடிட்டிங் செய்வதற்கெனத் தனித்துவமான கருவிகள் உள்ளன:

• கேமரா கோணங்களை (Camera Angles) மாற்றலாம்.

• வெளிச்சத்தை (Lighting) மாற்றியமைக்கலாம் (பகல்/இரவு).

• பின்னணியை (Background) மங்கலாக்கலாம் அல்லது தெளிவாக்கலாம்.

• குறிப்பிட்ட பொருட்களை மட்டும் தேர்வு செய்து எடிட் செய்யலாம்.

66
யாருக்கெல்லாம் கிடைக்கும்? இலவசமா?

பொதுவான பயனர்கள் கூகுளின் Gemini செயலி (App) வழியாக இதை அணுகலாம். இலவசப் பயனர்களுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். Google AI Plus, Pro மற்றும் Ultra சந்தாதாரர்களுக்குக் கூடுதல் கிரெடிட்கள் மற்றும் முழுமையான வசதிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories