புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்க மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் 10 முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படும்.
ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள புதிய இணைய பாதுகாப்புச் சட்டங்களின் பேரில், டிசம்பர் 10 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக வலைதளம் கணக்குகள் கட்டாயமாக நீக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றாத Facebook, Instagram, TikTok போன்ற நிறுவனங்களுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். இதற்கான முன்னெச்சரிக்கையாக, மெட்டா நிறுவனம் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
24
16 வயதுக்குட்பட்டவர்கள் தடை
இதுகுறித்து மெட்டா தெரிவித்ததாவது, 13 முதல் 15 வயது உள்ளதாக கணக்கிடப்பட்ட ஆஸ்திரேலிய பயனர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் இனி Instagram, Threads, Facebook போன்ற பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்த முடியாது. டிசம்பர் 4 முதல் 16 வயது வரையிலான புதிய கணக்குகள் உடனே தடுக்கப்படும். மேலும் பழைய கணக்குகளுக்கும் அணுகல் ரத்து செய்யப்படும். மெட்டா எதிர்பார்ப்பதாவது, டிசம்பர் 10க்குள் 16 வயதிற்குட்பட்ட அனைவரின் கணக்குகளும் முழுமையாக நீக்கப்படும்.
34
ஆன்லைன் பாதுகாப்பு
இந்த முடிவு நிரந்தரமானது அல்ல. 16 வயது நிறைவடைந்த பிறகு, அந்த கணக்குகளை நீங்கள் விட்டதுபோலவே மீண்டும் அணுக முடியும் என மெட்டா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு பல சமூக வலைதள நிறுவனங்கள் இந்த சட்டத்தை தெளிவில்லாதது, அவசரப்படுத்தப்பட்டது மற்றும் சிக்கலானது என விமர்சித்திருந்தன.
“ஆஸ்திரேலிய அரசின் குறிக்கோள் இளைஞர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழல் அமைத்தல்—என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். நண்பர்கள், ஆன்லைன் சமூகங்களிலிருந்து முற்றிலும் துண்டித்துவிடுவது சரியான தீர்வாக இல்லை” என நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே மெட்டா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறது.