உங்கள் பெர்சனல் கைடு ரெடி! கூகுள் மேப்பில் இணைந்த ஜெமினி - இனி பயணம் செம ஈசி!

Published : Feb 01, 2026, 06:00 AM IST

Google Maps கூகுள் மேப்பில் ஜெமினி AI வசதி அறிமுகம்! இனி நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளிங்கின் போது ஃபோனைத் தொடாமலே வாய்ஸ் கமாண்ட் மூலம் வழி கேட்கலாம். முழு விவரம் இதோ.

PREV
15
Google Maps

கூகுள் மேப்ஸ் என்றாலே வாகன ஓட்டிகளுக்குத்தான் என்ற நிலை இனி இல்லை. நடப்பவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காகவே ஒரு பிரத்யேக வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவான 'ஜெமினி' (Gemini) அசிஸ்டென்டை இப்போது நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளிங் நேவிகேஷனிலும் இணைத்துள்ளது. இதற்கு முன் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே கிடைத்த இந்த வசதி, இனி அனைவருக்கும் கிடைக்கப் போகிறது.

25
ஃபோனைத் தொடவே வேண்டாம்!

சாலையில் நடக்கும்போதோ அல்லது சைக்கிள் ஓட்டும்போதோ ஃபோனை கையில் வைத்துக்கொண்டு பார்ப்பது ஆபத்தானது. இந்தப் புதிய அப்டேட் மூலம், "ஹே கூகுள்" (Hey Google) என்று சொன்னாலே போதும், ஜெமினி உங்களுக்கு உதவத் தயாராகிவிடும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கான வழியை வாய்மொழியாகவே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைகள் ஃப்ரீயாகவும் (Hands-free), கண்கள் சாலையை நோக்கியும் இருப்பதை இது உறுதி செய்கிறது.

35
ஜெமினி உங்களுக்கு என்னெல்லாம் செய்யும்?

இது வெறும் வழிகாட்டி மட்டுமல்ல. நீங்கள் நடக்கும்போது, "நான் இப்போது எங்கே இருக்கிறேன்?", "அருகில் நல்ல ஹோட்டல் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டால், ஜெமினி உடனே பதில் சொல்லும். சைக்கிளில் செல்லும்போது, நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் (ETA), வழியில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்கள் போன்ற தகவல்களை விரல் நுனியில்... மன்னிக்கவும், நாக்கு நுனியில் வழங்குகிறது!

45
மெசேஜ் அனுப்புவது கூட ஈசி!

ஜெமினியின் திறமை இத்துடன் முடியவில்லை. நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போதே, "30 நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று அம்மாவிற்கு மெசேஜ் அனுப்பு" என்று சொன்னால், அதுவே டைப் செய்து அனுப்பிவிடும். உங்கள் அடுத்த மீட்டிங் எப்போது என்று கேட்டாலும் சொல்லிவிடும். சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு டிஜிட்டல் உதவியாளராக (Digital Assistant) உங்களுடனேயே பயணிக்கும்.

55
பயன்படுத்துவது எப்படி?

இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) என இரண்டிலும் கிடைக்கிறது.

1. கூகுள் மேப்ஸைத் திறக்கவும்.

2. செல்ல வேண்டிய இடத்தைத் தேர்வு செய்யவும்.

3. 'வாகிங்' (Walking) அல்லது 'சைக்கிளிங்' (Cycling) மோடைத் தேர்வு செய்யவும்.

4. மைக் ஐகானைத் தட்டவும் அல்லது "ஹே கூகுள்" என்று சொல்லவும். அவ்வளவுதான்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories