Elon Musk எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் ஸ்மார்ட்போன் குறித்த சூசக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வரும் இந்த போனின் சிறப்பம்சங்கள் இதோ.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), எக்ஸ் (X) எனத் தொட்டதெல்லாம் துலங்கும் எலான் மஸ்க், இப்போது ஸ்மார்ட்போன் சந்தையிலும் ஒரு கை பார்க்க முடிவெடுத்துவிட்டார் போலிருக்கிறது. சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், "ஸ்டார்லிங்க் போன் வந்தால் செம்மையா இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க் அளித்த பதில் தான் இப்போது டெக் உலகின் ஹாட் டாபிக். "எதிர்காலத்தில் இது நடக்காது என்று சொல்ல முடியாது" என்று அவர் கூறியிருப்பது, ஸ்டார்லிங்க் ஸ்மார்ட்போன் வருவதற்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்தியுள்ளது.
25
சாதாரண ஸ்மார்ட்போன் இல்லை, இது வேற லெவல்!
எலான் மஸ்க் எதைச் செய்தாலும் அது வித்யாசமாகத்தான் இருக்கும். அதேபோல, இந்த ஸ்டார்லிங்க் போனும் வழக்கமான ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன்களைப் போல இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். கேமரா மெகாபிக்சல், ஆப் ஸ்டோர் போன்ற பழைய விஷயங்களில் கவனம் செலுத்தாமல், இந்த போன் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (AI) திறனை மையமாகக் கொண்டிருக்கும்.
35
செயற்கை நுண்ணறிவே (AI) பிரதானம்
"Neural networks" எனப்படும் நரம்பியல் நெட்வொர்க்குகளின் செயல்திறனை அதிகப்படுத்துவதே இந்த போனின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். அதாவது, குறைந்த பேட்டரி திறனிலும் அதிகபட்ச ஏஐ பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்படும். எலான் மஸ்கின் சொந்த ஏஐ நிறுவனமான xAI மற்றும் Grok சாட்பாட் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
ஸ்டார்லிங்க் என்றாலே சாட்டிலைட் இணையம் தான் நினைவுக்கு வரும். இந்த ஸ்மார்ட்போனும் நேரடியாக விண்வெளி செயற்கைக்கோள்களுடன் இணையும் திறன் கொண்டதாக இருக்கலாம். இதனால் அடர்ந்த காடுகள், மலைப் பகுதிகள் என எங்கிருந்தாலும் இணைய வசதி கிடைக்கும். தரைவழி டவர்கள் தேவைப்படாத இந்த தொழில்நுட்பம், பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
55
எப்போது எதிர்பார்க்கலாம்?
இப்போதைக்கு இது ஒரு ஐடியா மட்டுமே. எலான் மஸ்க் இதை உடனடியாகத் தயாரிப்பதாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அவர் "இல்லை" என்று சொல்லாததே பெரிய விஷயம் தான். ஒருவேளை இந்த போன் விற்பனைக்கு வந்தால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.