தினமும் 42 நிமிடங்களுக்கு குறைவான சூரிய வெளிச்சம்: ஞாபக மறதியை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தகவல்!

Published : Oct 29, 2026, 05:47 PM IST

தினமும் 42 நிமிடங்களுக்கும் குறைவாகச் சூரிய வெளிச்சத்தில் இருந்தால் ஞாபக மறதி நோய் (Dementia) வரும் அபாயம் அதிகமா? புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்.

PREV
14
தினமும் வெயில்ல நிற்கலாமா?

தினமும் கிடைக்கும் பகல் நேரச் சூரிய வெளிச்சம், டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் உருவாக்கும் அபாயத்தைக் கணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரகாசமான பகல் வெளிச்சத்தில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'ஜெனரல் சைக்கியாட்ரி' (General Psychiatry) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, பகல் நேர வெளிச்சப் பரிமாற்றம் என்பது மூளை ஆரோக்கியத்தில் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சம் சுட்டிக்காட்டுகிறது.

24
பிரகாசமான பகல் வெளிச்சமும் குறைந்த டிமென்ஷியா அபாயமும்

இந்த தொடர்பை ஆராய்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் மணிக்கட்டில் அணியும் சாதனங்களைப் பயன்படுத்திய 87,577 முதியவர்களின் தரவுகளை ஆய்வு செய்தனர். இந்தச் சாதனங்கள் மூலம் பகல் மற்றும் இரவு நேரங்களில் பங்கேற்பாளர்கள் பெற்ற ஒளி வெளிச்சம் துல்லியமாக அளவிடப்பட்டது. ஏறத்தாழ 8.1 ஆண்டுகள் தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, ஆய்வில் பங்கேற்ற 741 பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

ஆய்வின் முடிவுகளில் ஒரு குறிப்பிடத்தக்கப் போக்கு வெளிப்பட்டது. சராசரியாக 1,000 லக்ஸுக்கும் அதிகமான பகல் நேர ஒளி வெளிச்சத்தைப் பெற்றவர்கள் (இது மேகமூட்டமான வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்குச் சமமானது), டிமென்ஷியா நோயால் பாதிக்கப்படும் அபாயம் 16% குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். இன்னும் பிரகாசமான பகல் வெளிச்சத்தில் (குறைந்தபட்சம் 5,000 லக்ஸ்) நீண்ட நேரம் செலவிடுபவர்களுக்கு இந்த ஆபத்து மேலும் குறைந்துள்ளது.

34
சூரிய வெளிச்சம் & மூளை ஆரோக்கியம்

பகல் நேரத்தில் மிகக் குறைந்த அளவிலேயே வெளிச்சத்தைப் பெற்றவர்களைப் பற்றிய ஆய்வு முடிவு மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. தினமும் 0.7 மணி நேரத்திற்கும் குறைவாக அதாவது 42 நிமிடங்களுக்குக் குறைவான பகல் வெளிச்சத்தைப் பெறுவது, ஏற்கெனவே அறியப்பட்ட 6 டிமென்ஷியா அபாயக் காரணிகளைக் காட்டிலும் ஆபத்தை முன்னறிவிக்கும் ஒரு வலுவான காரணியாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், இரவு நேர ஒளி வெளிச்சத்திற்கும் டிமென்ஷியா அபாயத்திற்கும் இடையே எந்தவொரு நேரடியான புள்ளியியல் தொடர்பும் கண்டறியப்படவில்லை. இதன் மூலம், இரவு நேர வெளிச்சத்தை விடப் பகல் நேரத்தின் பிரகாசமான வெளிச்சமே மூளை ஆரோக்கியத்துடன் ஆழமான தொடர்புடையதாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

44
டிமென்ஷியா பற்றிய புதிய ஆய்வு

சீனாவில் உள்ள குவாங்சோ மருத்துவப் பல்கலை. சேர்ந்த இணை ஆசிரியர் டாக்டர் ஹாங்லியாங் ஃபெங் (Hongliang Feng) கூறுகையில், "பகல் நேர ஒளி வெளிச்சம் என்பது டிமென்ஷியா அபாயத்தைக் கண்டறியும் ஒரு புதிய குறியீடாகச் செயல்படக்கூடும்" என்றார்.

இந்த முடிவுகள் ஒரு தொடர்பை மட்டுமே வெளிப்படுத்துகின்றனவே தவிர, நேரடியாக அதிக பகல் வெளிச்சத்தைப் பெறுவது மட்டுமே டிமென்ஷியாவைத் தடுக்கும் என்பதை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், பகல் நேர ஒளி வெளிச்சம் என்பது எதிர்காலத்தில் மேலும் ஆராயப்பட வேண்டிய டிமென்ஷியா அபாயத்தின் ஒரு மதிப்புமிக்க குறியீடாக இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories