ஃபிளிப்கார்ட்டில் 1 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பிளிப்கார்ட்டில் வரும் 23 ஆம் தேதி முதல் பிக் பில்லியன் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விதமான தயாரிப்புகள், ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்கள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
25
Flipkart Big Billion Days Sale Dates Announced-What To Expect
குறிப்பாக இந்த ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஷாவ்மி,மோட்டோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் ஆஃபர் உள்ளது. இதனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனையை வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
35
Flipkart Big Billion Days
மேலும், ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு ஸ்டாக் இருக்குமா, எதிர்பார்த்த அளவில் விற்பனை நடைபெறுமா என்பதை உறுதிசெய்யும் வகையில் பிளிப்கார்ட்டில் 1 ரூபாய் முன்தொகை செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய ஸ்மார்ட்போனை, காலியாகுவதற்குள் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்தொகை செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ள ஆயுத்தமாகினர்.
ஆனால், ரூ.1 முன்பதிவு திட்டம் வந்தவுடன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு இந்த முன்பதிவு இல்லை. வெறும் சார்ஜர், ஹெட்போன், பேக் கேஸ் என சாதரணமான 500, 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு மட்டுமே முன்தொகை வசதி உள்ளது.
இதை வைத்து நாங்கள் என்ன செய்ய? இதைத் தான் தெருவோரத்தில் நாங்கள் வாங்கி விடுவோமே என்ற அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பிளிப்கார்ட்டில் இப்படி நிகழ, அமேசான் தரப்பில் கிரேட் இந்தியன் சேல் மறுபுறம் நடைபெற உள்ளது.