ஆப்பிள் முதல் ஓப்போ வரை ஒவ்வொரு பிராண்டிலும் டாப் தீபாவளி ஆஃபர் எது?

First Published | Nov 10, 2023, 12:29 AM IST

தீபாவளி நெருங்கிவிட்டது. ஆப்பிள், சாம்சங், ரியல்மீ, ஒன்பிளஸ், சியோமி என அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பல சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன.நீங்கள் இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் பரிசீலிக்க வேண்டிய சலுகைகள் இதோ...

Apple Diwali offers

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் iPhone 15 சீரிஸ் வாங்கும்போது HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு உடனடி கேஷ்பேக் கிடைக்கும். iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max வாங்கும்போது ரூ.6,000 வரை தள்ளுபடி செய்யப்படும்; iPhone 15 மற்றும் iPhone 15 Plus மீது ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. iPhone 13 வாங்கினால் ரூ.3,000, iPhone SE வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். ஆப்பிள் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.67,800 வரை எக்ஸ்சேஜ் மதிப்பு வழங்குகிறது.

Samsung Diwali offers

சாம்சங் (Samsung) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy S23 FE ஸ்மார்ட்போனை 25 சதவீதம் தள்ளுபடியில் 49,999 ரூபாய்க்கு வழங்குகிறது. இதற்கிடையில், Galaxy S23 மொபைல் ரூ.61,999 முதல் கிடைக்கிறது. Galaxy F23, Galaxy M13 மற்றும் Galaxy M04 ஆகியவற்றிலும் சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

Tap to resize

OnePlus Diwali offers

ஒன்பிளஸ் (OnePlus) அதன் Nord சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறது. OnePlus Nord 3 5G மொபைல் ரூ.3,000 வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கும். OnePlus Nord CE 3 5G ரூ.2,000 வங்கி தள்ளுபடியில் வாங்கலாம். OnePlus 11R 5G, OnePlus 11R 5G சோலார் ரெட் ஸ்பெஷல் எடிஷன் ஆகியவையும் ரூ.2,000 தள்ளுபடியில் வாங்க முடியும்.

Realme Diwali offers

ரியல்மீ (Realme) தீபாவளி சலுகை விற்பனையில் Realme 11 Pro 5G சீரீஸ் மற்றும் Realme 11 5G சீரீஸ் மொபைல்களுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். Realme C53 மொபைலை 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். Realme C55 (ரூ.8,999), Realme C51 (ரூ.7,999க்கு ) மொபைல்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.

Xiaomi Redmi Diwali offers

சியோமி ரெட்மி (Xiaomi Redmi) ஸ்மார்ட்போன்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது. Redmi Note 12 Pro 5G மொபைல் ரூ.17,999க்கு வாங்கலாம். ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பயன்படுத்திக்கொள்ளலாம். Redmi A2 ரூ.5,299க்கு கிடைக்கும். Xiaomi 13 Pro ஸ்மார்ட்போன் ரூ.69,999க்கு வாங்கலாம். எக்ஸசேஜ் மூலம் ரூ.5,000 போனஸ் கிடைக்கும்.

Vivo Diwali offers

விவோ (Vivo) தனது X90 சீரீஸில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது. ஐசிஐசிஐ, எஸ்பிஐ, எச்எஸ்பிசி, யெஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் ஒன்கார்டு மூலம் V29 சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.4,000 வரை கேஷ்பேக் கிடைக்கிறது. உங்கள் பழைய Vivo மொபைலை எக்ஸ்சேஜ் செய்தால் ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். Y200 5G மொபைலுக்கு ரூ.2,500 வரை கேஷ்பேக் சலுகை உள்ளது. Vivo Y56, Vivo Y27 மொபைல்களுக்கு குறிப்பிட்ட வங்கிகள் மூலம் ரூ.1,000 வரை கேஷ்பேக் கிடைக்கிறது.

Oppo Diwali offers

Oppo நிறுவனத்தின் Oppo Find N3 Flip ரூ.94,999க்கு கிடைக்கும். சில வங்கிகளின் கார்டு மூலம் வாங்கினால் ரூ.12,000 வரை கேஷ்பேக் பெறலாம். பழை மொபைல்களுக்கு ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். Oppo Reno 10 Pro+ 5G சிறப்பு விலையாக ரூ.54,999 க்கு விற்பனைக்கு உள்ளது. Oppo Reno10 Pro (ரூ.39,999), Oppo Reno10 (ரூ. 32,999) மற்றும் Oppo A79 5G (ரூ.19,999) மொபைல்களையும் சிறப்புச் சலுகை விலையில் வாங்கலாம்.

Latest Videos

click me!