எக்கச்சக்க ஆஃபர் இருக்கு... ஆனா ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது 5 விஷயத்துல எச்சரிக்கையா இருக்கணும்!

First Published Nov 7, 2023, 12:37 AM IST

தீபாவளி நெருங்கிவிட்டாலே ஆன்லைன் ஷாப்பிங்கில் சலுகை விற்பனை தொடங்கிவிடும். மொபைல், ஃப்ரிட்ஜ், டிவி, ஏசி எனப் பல பொருட்களை குறைந்த விலையில் வாங்க இதற்காகவே காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

நம்பகமான இணையதளம்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் எப்போதும் பாதுகாப்பான இணையதளங்களில் இருந்து மட்டும் ஷாப்பிங் செய்ய வேண்டும். எந்த இணையதளத்தில் இருந்து எதை வாங்கினாலும், முன்கூட்டியே அந்தத் தளம் நம்பகமானது தானா என்று கண்டிப்பாக சரிபார்க்கவும்.

விலையை ஒப்பிடுதல்

ஒரே பொருளின் விலையை வெவ்வேறு இணையதளங்களில் வேறுபட்டிருக்கலாம். எனவே, வாங்குவதற்கு முன், விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் வாங்க விரும்பும் பொருள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு இருக்கும். அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சலுகைகள், நிபந்தனைகள்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, கவர்ச்சிகரமான சலுகை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. எனவே, ஆன்லைனில் ஏதாவது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால், எச்சரிக்கையாக நிபந்தனைகள் முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவது ஆன்லைன் ஷாப்பிங்கின் எளிய வழி தான். ஆனால் எதையும் வாங்கும் முன், அது பாதுகாப்பானதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்.

ரிவியூ எப்படி இருக்கு?

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் வாங்க விரும்பும் பொருளை உங்களுக்கு முன் யாரேனும் வாங்கியிருக்கிறார்களா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே அந்தப் பொருளை வாங்கியவர்கள் கூறியிருக்கும் ரிவியூ என்ன என்பதைப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

click me!