புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?

Published : Dec 04, 2025, 09:29 PM IST

Scam மக்களைக் குறிவைக்கும் 5 புதிய சைபர் மோசடிகள் பற்றித் தெரியுமா? டிஜிட்டல் அரெஸ்ட், கூரியர் ஸ்கேம் மற்றும் AI மோசடிகளிலிருந்து உங்கள் பணத்தைப் பாதுகாப்பது எப்படி? முழு விவரம் உள்ளே.

PREV
16
Scam உங்களை ஏமாற்றக் காத்திருக்கும் 5 புதிய டிஜிட்டல் மோசடிகள்! உஷார் மக்களே!

டிஜிட்டல் உலகம் வளர வளர, திருடர்களும் ஹைடெக் ஆகிவிட்டார்கள். முன்பு போலச் சங்கிலிப் பறிப்பு, பிக்பாக்கெட் எல்லாம் இப்போது குறைவு. வீட்டில் இருந்தபடியே நம் வங்கிக் கணக்கை காலி செய்யும் 'சைபர் மோசடிகள்' (Cyber Scams) தான் இப்போது அதிகம். அதிலும் குறிப்பாக, சமீபகாலமாகப் பரவி வரும் 5 ஆபத்தான மோசடிகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

26
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி (Digital Arrest Scam)

திடீரென உங்களுக்கு ஒரு வீடியோ கால் வரும். அதில் போலீஸ் சீருடையில் இருக்கும் ஒருவர், "உங்கள் ஆதார் கார்ட் பயன்படுத்தித் தவறான பார்சல் அனுப்பப்பட்டுள்ளது" அல்லது "உங்கள் வங்கிக் கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது" என்று மிரட்டுவார். "உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்கிறோம்" என்று கூறி, கேமராவிற்கு முன்பே மணிக்கணக்கில் உட்கார வைத்து, பயமுறுத்திப் பணத்தைப் பறிப்பார்கள்.

• எச்சரிக்கை: நிஜ போலீஸ் ஒருபோதும் வீடியோ காலில் விசாரணை நடத்த மாட்டார்கள். 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற சட்டமே கிடையாது.

36
பார்சல் ஸ்கேம்

"கூரியர் டெலிவரி செய்ய வந்தோம், நீங்கள் வீட்டில் இல்லை. அதனால் இந்தப் பார்சலைத் திருப்பி அனுப்புகிறோம். இதைத் தடுக்கக் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ரூ.5 செலுத்துங்கள்" என்று மெசேஜ் வரும். அந்த லிங்க்கை கிளிக் செய்தால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கு விபரங்கள் திருடப்படும்.

46
வேலை மோசடி

"வீட்டில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களுக்கு லைக் (Like) போட்டால் போதும், தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம்" என்று ஆசை காட்டுவார்கள். முதலில் நம்பிக்கையை வரவழைக்கச் சிறிய தொகையை உங்கள் கணக்கில் போடுவார்கள். பின்னர், "பெரிய தொகை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்" என்று கூறி, மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

56
ஏஐ வாய்ஸ் குளோனிங்

இது மிகவும் ஆபத்தானது. உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் குரலைச் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அப்படியே பேசி, "நான் அவசரமான சூழ்நிலையில் இருக்கிறேன், உடனே பணம் அனுப்புங்கள்" என்று கேட்பார்கள். அந்தக் குரல் அச்சு அசல் உங்கள் உறவினர் போலவே இருப்பதால் நீங்களும் ஏமாந்துவிடுவீர்கள்.

• தீர்வு: சந்தேகம் வந்தால், அந்த உறவினரின் உண்மையான நம்பருக்கு போன் செய்து உறுதி செய்யுங்கள்.

66
மின் இணைப்பு துண்டிப்பு

"கடந்த மாத மின் கட்டணத்தைச் செலுத்தாததால், இன்றிரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என்று மெசேஜ் வரும். பதட்டத்தில் நீங்கள் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், ஒரு செயலியைக் (App) டவுன்லோட் செய்யச் சொல்வார்கள். அதைச் செய்தால் உங்கள் போன் அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

• அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் வீடியோ கால்களை எடுக்காதீர்கள்.

• எந்தவொரு லிங்க்கையும் (Link) அவசரம் கருதி கிளிக் செய்யாதீர்கள்.

• பயமுறுத்தும் வகையில் வரும் அழைப்புகளைக் கண்டு பதற்றப்படாமல், உடனே போலீஸ் (1930) அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளியுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories