ஜியோ சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

First Published | Oct 15, 2024, 1:58 PM IST

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஜிம் சிம் கார்டுகளை விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ஜியோ நிறுவனத்திற்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

Jio Sim

தகவல் தொழில்நுட்ப துறையில் ஜியோ நிறுவனம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஜியோ நிறுவனம் வருவதற்கு முன்பு அழைப்பு, டேட்டா என அனைத்திற்கும் நாம் அதிக தொகையை செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றியது ஜியோ நிறுவனம் தான். குறைந்த செலவில் பல சேவைகளை வழங்கியதால் குறுகிய காலத்திலேயே ஜியோவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இணைந்தனர். 

ஆனால் ஓரிரு இடங்களில் ஜியோவின் நெட்வொர்க் கவரேஜ் முறையாக கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஜியோ சிம் வாங்கிய பயன்படுத்தியவர்கள் போதிய சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Jio Sim

அதிலும் குளவேலி உள்ளிட்ட கிராமங்களில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை எனவும், வீட்டுக்குள் இருக்கும் போது சிக்னலே கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இணைய சேவையை பயன்படுத்த முடியாத நிலையில், செல்போன் அழைப்புகளையும் சரியாக பேச முடிவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இணைய வசதி கிடைக்காததால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஜியோ நிறுவனத்தின் புகார் அளித்துள்ளனர். தொலைபேசி மட்டுமின்றி, இமெயில் மூலமாகவும் ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர் கேரிடம் புகார் அளித்துள்ளனர்.

பழைய மொபைல் சும்மா இருக்கா? அதை நன்கொடையாக வழங்கலாமே!

Latest Videos


Jio Sim

குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நெட்வொர்க் கவரேஜ் குறைவாக இருப்பதாக தெரிவித்த ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் சேவை மேம்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. மேலும் இண்டர்நெட் வேகம் குறித்தும் புகார் அளிக்கப்பட்ட போது அந்நிறுவனம் இந்த பிரச்சனையை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளது. 

ஆனால் ஜியோ நிறுவனத்த்ன் இணைய சேவையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வலங்கைமான் பகுதி மக்கள் சிலர் இணைந்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Jio Sim

இந்த வழக்கை விசாரித்து வந்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் இணைய வேகம் குறைவாக இருக்கும் வலங்கைமான பகுதியில், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்கள் சிம் கார்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். 

30 நாள் தான ஒரு மாசம்? அப்புறம் என்ன 28 நாள் ரீசார்ஜ்? மொபைல் நிறுவங்கள் அப்படி செய்ய காரணம் என்ன?

Jio Sim

மேலும் புகார்தாரர்கள் இணைப்பை பெற்ற நாள் முதல் தற்போது வரை எவ்வளவு கட்டணம் செலுத்தி உள்ளார்களோ, அதற்கு ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.20,000 மற்றும் வழக்கு செலவு தொகையாக தலா ரூ.10,000 வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 30 நாட்களுக்குள் இந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் ஜியோ நிறுவனத்திற்கு குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

click me!