ஓபன்ஏஐ, 'சாட்ஜிபிடி அட்லஸ்' என்ற புதிய ஏஐ வெப் பிரவுசரை வெளியிட்டுள்ளது. இது கூகுள் குரோம் மற்றும் பெர்பிலெக்சிட்டியின் காமெட் பிரவுசருக்கு போட்டியாக, சாட்ஜிபிடி சேவையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
ஓபன்ஏஐ புதிய ஏஐ வெப் பிரவுசர் ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ (ChatGPT Atlas) ஐ வெளியிட்டுள்ளது. இது கூகுள் குரோம் மற்றும் பெர்பிலெக்சிட்டியின் காமெட் பிரவுசரை நேரடியாக சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலமான சாட்ஜிபிடி சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அட்லஸ், வலை பிரவுசர் மற்றும் ஏஐ உதவியாளராக புதிய அனுபவத்தை வழங்குகிறது. தற்போது, மேக்ஓஎஸ் பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளனர். மேலும் விரைவில் விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
ஓபன்ஏஐ புதிய ஏஐ வெப் பிரவுசர்
இணைய பிரவுசர் சந்தையில் கூகுளின் குரோம் பிரவுசர் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. சுமார் 60% சந்தைப் பங்கு குரோமிடம் உள்ளது. உலகளவில் 300 கோடிக்கும் மேலான பயனர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் சாதனங்களில் பிரவுசர் சஃபாரி, மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.
34
அட்லஸ் vs குரோம்
கூகுள் குரோமுக்கு வலுவான போட்டியை உருவாக்கும் நோக்கில், ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனம் பெர்பிலெக்சிட்டி ஜூலை 9, 2025 அன்று ‘காமெட்’ என்ற ஏஐ வெப் பிரவுசரை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் மாதத்தில் காமெட் பிளஸ் சேவை தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் மேக்ஸ் சந்தாதாரர்கள் மாதம் 200 டாலர் கட்டணத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.
அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில், பெர்பிலெக்சிட்டி அனைத்து பயனர்களுக்கும் காமெட் பிரவுசரை இலவசமாக்கியது. இது இணைய தேடல்கள், மின்னஞ்சல் உருவாக்கம், டேப் ஒழுங்கமைப்பு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வேலைகளில் தனிப்பட்ட உதவியாளராக செயல்படுகிறது. முழுமையாக இலவசமாக்கப்பட்டதால், காமெட் கூகுள் குரோமுக்கு வலுவான மற்றும் தனித்துவமான போட்டியாளராக திகழ்கிறது.