ஒரே ரீசார்ஜ், 365 நாள்.. இந்த ஆஃபர் பிப்.24 வரை மட்டும்.. உடனே முந்துங்க மக்களே

Published : Jan 26, 2026, 03:48 PM IST

பிஎஸ்என்எல் தனது 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு "பாரத் கனெக்ட் 26" என்ற புதிய ஆண்டு ப்ரீபெய்டு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சலுகை ஜனவரி 24 முதல் பிப்ரவரி 24 வரை மட்டுமே கிடைக்கும்.

PREV
14
பிஎஸ்என்எல் குடியரசு தின ஆஃபர்

குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக சூப்பர் ரீசார்ஜ் ஆஃபரை கொண்டு வந்துள்ளது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் என்பதால், மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையிலேயே அதிக பயன்கள் தரும் பிளான்களுக்காக பிஎஸ்என்எல் பிரபலமானது. அதே வரிசையில், இப்போது 365 நாட்கள் செல்லுபடியாகும் புதிய ஆண்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

24
பாரத் கனெக்ட் 26 பிளான்

இந்த புதிய ப்ரீபெய்டு பிளான் பெயர் “Bharat Connect 26”. 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆஃபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வருடம் முழுக்க கால் + டேட்டா பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். இந்த பிளான் சில நாட்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பதால், விருப்பம் உள்ளவர்கள் கால தாமதம் செய்யாமல் ரீசார்ஜ் செய்யலாம்.

34
பிஎஸ்என்எல் 2626 ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் Bharat Connect 26 பிளான் விலை ரூ.2626. இதில் ஒரு ஆண்டு முழுக்க Unlimited Calls கிடைக்கும். அதோடு தினமும் 2.6GB டேட்டா பயன்படுத்தலாம். மேலும் தினசரி 100 SMS கூட வழங்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களின் அதிக பிளான்களில் பொதுவாக 2.5GB டேட்டா தான் வழங்கப்படும் என்று கூறப்படும் நிலையில், பிஎஸ்என்எல் இதில் கொஞ்சம் டேட்டாவை தருவது முக்கிய ஹைலைட்.

44
365 நாள் பிஎஸ்என்எல் பிளான்

இந்த ஆஃபர் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 24 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் ரீசார்ஜ் செய்தால் தான் இந்த பிளானின் பயனை பெற முடியும். பிஎஸ்என்எல் ஏற்கனவே ரூ.2399 (2.5GB/நாள்) மற்றும் ரூ.2799 (3GB/நாள்) என்ற இரண்டு ஆண்டு பிளான்களை வழங்குகிறது. அந்த பிளான்களில் தினசரி டேட்டா முடிந்ததும் இன்டர்நெட் வேகம் 40Kbps ஆக குறையும். இப்போது புதிய பாரத் கனெக்ட் 26 சேருவதால் பிஎஸ்என்எல்-க்கு ஆண்டு பிளான்கள் தேர்வு இன்னும் அதிகமாக உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories