பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்கள்; ரூ.200 கூட இல்ல; தினமும் 2ஜிபி டேட்டா; அன்லிமிடெட் கால்ஸ்!

Published : Jan 10, 2025, 08:57 AM IST

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200 விலைக்குள் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்கள்; ரூ.200 கூட இல்ல; தினமும் 2ஜிபி டேட்டா; அன்லிமிடெட் கால்ஸ்!
BSNL Recharge Plans

பிஎஸ்என்எல்

இந்தியாவில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவை என்று சென்று விட்ட நிலையில், இன்னும் 4ஜி சேவையே தொடங்காத பிஎஸ்என்எல் பக்கம் ஏராளமான வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருவதற்கு அது மலிவு விலை திட்டங்களை செயல்படுத்தி வருவதுதான் காரணம். 

அந்த வகையில் பிஎஸ்என்எல் ரூ.200 விலைக்குள் டேட்டா வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை என்னென்ன திட்டங்கள்? இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

25
BSNL Plans Under Rs.200

ரூ.107 திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.107 திட்டம் கால்ஸ் நன்மைகள் மற்றும் மலிவு விலையை விரும்பும் மொபைல் பயனர்களுக்கு ஏற்றது. இந்த ரீசார்ஜ் பேக்குகளில், 200 நிமிடங்களுக்கு இலவச காலிங் வசதி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் உள்ளூர் மற்றும் எஸ்டிடி காலிங் செய்யலாம். அதே வேளையில் இது டேட்டா அல்லது அன்லிமிடெட் கால் வசதியை வழங்காது. ஆனால் குறைவான கால்களை செய்யும் பயனர்களுக்கு இந்த 200 நிமிடங்கள் போதுமானது. டேட்டா இல்லாத ஒரு திட்டத்தை, கால் வசதியை மட்டும் தேடுகிறவர்களுகு இந்த திட்டம் சிறப்பு வாய்ந்ததாகும். 

ப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை; அடிச்சு தூக்கும் ஆபர்; எந்தெந்த போன்களுக்கு விலை குறைப்பு?

35
BSNL Best Plans

ரூ.153 திட்டம் 

இந்த ரீசார்ஜ் திட்டம் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் தேவைப்படுபவர்களுக்கு உரித்தானது. இந்த பிளான் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அன்லிமிடெட் கால்ஸ்களை (உள்ளூர்/எஸ்டிடி) வழங்குகிறது. இந்த திட்டத்தில், உள்ளூர் மற்றும் தேசிய ரோமிங் கால்ஸ் தவிர, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க்கில் அழைக்கும் விருப்பமும் கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக இருக்கும்.

45
BSNL Budget Plans

ரூ.199 திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.199 திட்டம் எந்த நெட்வொர்க்கிலும் உள்ளூர் மற்றும் தேசிய ரோமிங் கால் வசதியை வழங்குகிறது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க்கும் இதில் அடங்கும். இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த 2ஜிபி டேட்டா தீர்ந்தபிறகும் 40Kbpsவேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் அதிக செலவழிப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருத்தமானதாகும். 

ஜியோ பயனர்களே! அடிக்கடி மிஸ்டு கால் வருதா?

55
BSNL DataPack Plans

ரூ.299 திட்டம் 

இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.200 விலையுடன் சற்று அதிகமாக உள்ளது. ஆனாலும் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த திட்டத்தில், உள்ளூர் மற்றும் தேசிய ரோமிங்கில் அன்லிமிடெட் கால்ஸ் (உள்ளூர்/ எஸ்டிடி) வசதி கிடைக்கிறது. இது தவிர இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டா தீர்ந்த பிறகும் 40Kbpsவேகத்தில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அதிகமாக ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories