பிஎஸ்என்எல் நிறுவனம் "Spark" என்ற புதிய ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், மாதத்திற்கு ரூ.399 என்ற அறிமுக விலையில் 50 Mbps வேகத்தில் 3300GB டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்), ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிய “Spark” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிக தரவு மற்றும் நல்ல வேகம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாதத்திற்கு ரூ.399 எந்த விலையில் 50 Mbps வேகம், அதிக அளவு டேட்டா மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த திட்டம் கவனம் ஈர்க்கிறது. வீட்டில் வேலை செய்வோர், ஆன்லைன் படிப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற தேவைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் Spark திட்டத்தில் மாதத்திற்கு மொத்தம் 3300GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
23
BSNL fiber broadband
இதன் மூலம் பயனர்கள் 50 Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்த அறிமுக சலுகை 12 மாதங்கள் மட்டும் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஆண்டு முடிந்த பிறகு இதே திட்டத்திற்கான கட்டணம் மாதத்திற்கு ரூ.449 ஆக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 2026 ஜனவரி 13 முதல் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் பாதுகாப்பான பிரவுசிங் வசதி வழங்கப்படுவது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற விரும்பும் பயனர்கள், 1800 4444 என்ற பிஎஸ்என்எல் வாட்ஸ்அப் எண்ணுக்கு “HI” என்று மெசேஜ் அனுப்பினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேவையான தகவல்களுடன் திட்டத்தை எளிதில் செயல்படுத்த முடியும்.
33
BSNL Spark plan activation
இதற்கிடையே பிஎஸ்என்எல் தனது மொபைல் ரீசார்ஜ் திட்டங்களிலும் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் தொடங்கிய கூடுதல் டேட்டா ஆஃபர், பின்னர் 2026 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், ரூ.225, ரூ.347, ரூ.485 மற்றும் ரூ.2399 திட்டங்களில் பயனர்களுக்கு 0.5GB கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ரூ.225 திட்டத்தில் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் என்றும், மற்ற திட்டங்களில் தினசரி 2.5GB டேட்டா கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.