பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.225 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் என பல சலுகைகள் அடங்கும். ஒரு மாத காலத்திற்கான 75 ஜிபி டேட்டா அளவு வழங்கப்படுவது, இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இவ்வளவு குறைந்த விலையில் ஆஃபரை தற்போது எந்த தனியார் நெட்வொர்க் நிறுவனமும் வழங்கவில்லை. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருவதால், வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் நோக்கில் இப்படியான விலைகுறைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது.