அம்மாடியோவ்.. ரூ.1.73 கோடி பில்லை 29 லட்சமாக குறைத்த ஏஐ.. மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டிய சாட்பாட்

Published : Nov 06, 2025, 03:25 PM IST

அமெரிக்காவில், ஒரு குடும்பம் ரூ.1.73 கோடி மருத்துவமனை பில்லை எதிர்கொண்டது. அவர்கள் AI சாட்பாட்டைப் பயன்படுத்தி பெரும் தொகையை மிச்சப்படுத்தினர்.

PREV
12
சாட்பாட் உதவியால் பணம் மிச்சம்

அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்டியாக் அர்ரெஸ்ட் ஆன ஒருவரின் பில் தொகை தான் அது. கார்டியாக் அர்ரெஸ்ட் வந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் இறந்துவிட்டார். அந்த துயரத்துக்குப் பிறகு மருத்துவமனை ரூ.1.73 கோடி (சுமார் $1,95,000) என்ற பிரம்மாண்டப் பில்லை அவர்களுக்கு அனுப்பியது.

மருத்துவ பில் குறைப்பு

நான்கு மணி நேர சிகிச்சைக்கு இத்தனை பெரும் தொகை வந்தது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர்களின் மருத்துவ காப்பீடு இரண்டு மாதங்களுக்கு முன்பே காலாவதியானது. இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காக அவர்கள் மனித உதவிக்கு பதிலாக தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தனர் அதாவது AI சாட்பாட் ஆன “கிளாட்.” மருத்துவமனை பில்லில் மறைந்திருக்கும் தவறுகளை AI கண்டுபிடித்தது அந்த ஏஐ.

AI சாட்பாட்

மரணமடைந்த நபரின் மைத்துனர் AI சாட்பாட் மூலம் பில்லில் உள்ள ஒவ்வொரு மருத்துவ குறியீடுகளையும் (CPT குறியீடுகள்) ஆய்வு செய்தார். அமெரிக்க மருத்துவமனை பில்லில் பல சிக்கலான மருத்துவ குறியீடுகள் இருக்கும். சாதாரண நபர்களுக்கு அவை புரியாதவையாக இருக்கும். ஆனால் “Claude” எனப்படும் AI அவசியத்தை நுணுக்கமாக வாசித்து, இரட்டை பில்லிங் மற்றும் தவறான கோடிங் போன்றவற்றை கண்டுபிடித்தது.

22
பில்லிங் தவறு

மருத்துவமனையில் ஒரே “மாஸ்டர் புரோசீஜர்” பில் வைத்து, அதன் ஒவ்வொரு சிறு செயல்முறைக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுமார் $1,00,000 (ரூ.8.8 மில்லியன்) வரை கூடுதல் தொகை சேர்க்கப்பட்டது. மேலும், தவறான “இன்பேஷண்ட்” மற்றும் “எமர்ஜென்சி” கோடுகள், வெண்டிலேட்டர் கட்டண பிழைகள் போன்றவற்றையும் AI கண்டறிந்துள்ளது. இந்த ஆதாரங்களுடன் குடும்ப மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பில்லை குறைத்த மருத்துவமனை

அதில், அனைத்து பில்லிங் பிழைகள் மற்றும் மெடிகேர் விதி மீறல்களை AI கண்டுபிடித்ததை விவரித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. உடனே மருத்துவமனை தவறை ஒப்புக்கொண்டு, பில்லை ரூ.1.73 கோடியில் இருந்து ரூ.29 லட்சத்தைக் குறைத்தது. பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் குடும்பம் அந்தத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டது. மாதம் ரூ.1,800 (சுமார் $20) செலவில் வாங்கிய AI சாட்பாட் சேவை, அந்தக் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடியை மிச்சப்படுத்தி தந்தது. இச்சம்பவம் உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories