ஜியோ, ஏர்டெலுக்கு செக்.. ரூ.200 கூட இல்ல.. 30 நாள் வேலிடிட்டியுடன் டேட்டா மழை.. அசத்தும் BSNL

Published : Feb 18, 2026, 02:57 PM IST

BSNL Budget Plan: Full Details Here: 30 நாள் வேலிடிட்டியுடன் ரூ.200 கூட இல்லாத பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சூப்பர் பிளான் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
பிஎஸ்என்எல் பிளான்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்ததிலிருந்து, பெரும்பாலான பயனர்கள் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி வருகின்றனர். BSNL ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகவும் மலிவானவை. அதனால்தான் பெரும்பாலான பயனர்கள் BSNL திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.

24
ரூ.199 பிளானில் 30 நாள் வேலிடிட்டி

இந்த நிலையில், நடுத்தர மக்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் கொண்டு வந்த ஒரு பட்ஜெட் பிளான் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். நாம் பார்க்கப்போவது பிஎஸ்என்எல்லின் ரூ.199 பிளான். 

இந்த திட்டத்தில் மொத்தம் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் 24 நாட்கள் அல்லது 28 நாட்களே வேலிடிட்டி வழங்கி வருகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் ஒரு மாத வேலிடிட்டி (30 நாட்கள்) வழங்குவது குறிப்பிடத்தக்கது.

34
அன்லிமிடெட் டேட்டா

மேலும் இந்த ரூ.199 பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த 30 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு 60ஜிபி டேட்டா கிடைக்கும். இதுமட்டுமின்றி அன்லிமிடெட் கால்ஸ் வசதியும் பெற முடியும். 

அத்துடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் உங்களுக்கு கிடைக்கும். தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் தினசரி டேட்டா தீர்ந்தாலும் 40 Kbps வேகத்தில் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்தலாம்.

44
ஜிரோ, ஏர்டெல்லை விட குறைவான விலை

ரூ.200க்கும் குறைவான விலை கொண்ட இந்த பட்ஜெட் பிளான் நடுத்தர மக்கள், மாணவர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த திட்டமாகும். இது மட்டுமின்றி ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் 28 நாள் வேலிடிடிக்கு ரூ.250 முதல் தான் பிளான்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் BSNLபிளானை பார்க்கும்போது இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories