இனி சார்ஜ் செய்ய தேவையே இல்லை! 50 வருடங்கள் நீடிக்கும் அணுசக்தி பேட்டரி!

சீனாவின் பீட்டாவோல்ட் நிறுவனம் அணுசக்தியில் இயங்கும் BV100 பேட்டரியை உருவாக்கியுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் விண்வெளி சாதனங்களில் பயன்படுத்த ஏற்றது.

Betavolt BV100: No charging needed, This coin-sized nuclear battery lasts 50 years sgb
Nuclear battery lasts 50 years

50 ஆண்டுகள் நீடிக்கும் பேட்டரி:

கடந்த இருபதாண்டுகளில் பேட்டரி தொழில்நுட்பம் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது பவர் பேங்குகளில் சோடியம்-அயன் செல்கள் உள்ளன. பெரும்பாலான நவீன செல்கள் இப்போது முன்பு இருந்ததை விட நீண்ட காலம் நீடிக்கின்றன. ஆனால், இப்போது ஒரே சார்ஜில் பல ஆண்டுகள் நீடிக்கும் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Betavolt BV100: No charging needed, This coin-sized nuclear battery lasts 50 years sgb
Betavolt BV100 nuclear battery

பீட்டாவோல்ட் BV100 பேட்டரி:

என்ற சீன பேட்டரி நிறுவனம் சமீபத்தில் அணுசக்தியால் இயங்கும் பேட்டரியை வெளியிட்டுள்ளது. ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கும் இது BV100 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நிக்கல்-63 ஐ அதன் கதிரியக்க மூலமாகப் பயன்படுத்துகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.


Betavolt BV100 nuclear battery

பீட்டாவோல்ட் BV100 பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு?

பேட்டரியின் ஆற்றல் வெளியீடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் ஸ்மார்ட்போன்கள் அல்லது கேமராக்களை சார்ஜ் செய்ய முடியாது. இருந்தாலும் BV100 இப்போதே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் விண்வெளி சாதனங்கள் போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம். பீட்டாவோல்ட் நிறுவனம் ஏற்கெனவே இந்த பேட்டரியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது.

Coin-sized nuclear battery

பீட்டாவோல்ட் BV100 பேட்டரி எவ்வாறு செயல்படுகிறது?

பீட்டாவோல்ட்டின் BV100 நியூக்ளியர் பேட்டரி 3 வோல்ட்டில் 100 மைக்ரோவாட் மின் உற்பத்தியை வழங்குகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு வாட் திறன் கொண்ட பேட்டரியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதை பொதுப் பயன்பாட்டில் உள்ள பல மின்னணு சாதனங்களில் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரோன்களில் இந்த பேட்டரியை பயன்படுத்தி பறக்கும் நேரத்தை நீட்டிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

No charging nuclear battery

பீட்டா துகள்கள் கசிவைத் தடுப்பது எப்படி?

பீட்டாவோல்ட்டின் BV100 பேட்டரி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி கதிரியக்கத்தை உமிழ்கிறது. மற்றொரு பகுதியில் உள்ள செமிகண்டக்டர் ஆற்றலை உறிஞ்சுவதற்கு பயன்படுகிறது. கதிரியக்கப் பகுதி காலப்போக்கில் சிதைகிறது. அதுவரை செமிகண்டக்டருக்கான அதிவேக எலக்ட்ரான்களை தருகிறது. இந்த நிகழ்வு இரண்டு எலக்ட்ரான்-துளைகளை உருவாக்கி சிறிய மின் ஆற்றலை வெளியிடுகிறது. கதிரியக்கத்தில் தோன்றும் தீங்கு விளைவிக்கும் பீட்டா துகள்கள் கசிவதைத் தடுக்க, ஒரு மெல்லிய அலுமினியத் தாள் பயன்படுத்துகிறது.

Betavolt BV100 nuclear battery benefits

அணுசக்தி பேட்டரியை எங்கே பயன்படுத்தலாம்?

கெமிக்கல் பேட்டரிகள் அளவுக்கு ஆற்றலை உற்பத்தி செய்யாவிட்டாலும், சிறிய அளவிலான மின்சாரம் கிடைக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு மேல் அதிக ஆற்றல் தேவைப்படாத மின்னணு சாதனங்களுக்கு சக்தி அளிக்க இந்த பேட்டரி போதுமானதாக இருக்கும். இந்த அணுசக்தி பேட்டரிகள் ஸ்மார்ட்போன்களில் உள்ள பேட்டரிகளுக்கு மாற்றாக இருக்காது. ஆனால் விண்வெளியில் கிரகங்களைச் சுற்றிவரும் ரோவர்கள், கடலில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் போன்றவற்றுக்கு ஏற்றவையாக இருக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!