Compact Phones: வெயிட் கம்மி! பவர் ஜாஸ்தி! இந்தியாவில் கலக்கும் பெஸ்ட் 'காம்பாக்ட்' ஸ்மார்ட்போன்கள்! முழு லிஸ்ட்!

Published : May 28, 2026, 07:56 PM IST

Compact Phones: பெரிய ஸ்கிரீன் போன்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்தாலும் கையடக்க  சின்ன சைஸில் இருக்கும் காம்பாக்ட் போன்களுக்கும் மவுசு குறையவில்லை. இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் காம்பாக்ட் போன்கள் குறித்து பார்ப்போம்.

PREV
14
ஐபோன் 17: சின்ன சைஸில் ஃபிளாக்ஷிப் அனுபவம்

ஆப்பிளின் ஐபோன் 17, காம்பாக்ட் போன் வரிசையில் ஒரு முக்கியமான மாடல். இதில் 6.3 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 120Hz ப்ரோமோஷன் டெக்னாலஜி உள்ளது. A19 சிப் பவர் கொடுக்கிறது. 48 மெகாபிக்சல் மெயின் கேமரா, சூப்பரான வீடியோ ரெக்கார்டிங் வசதியும் இதன் ஸ்பெஷல். இந்தியாவில் ஐபோன் 17-ன் ஆரம்ப விலை ரூ.82,900 ஆகும். காம்பாக்ட் போன்களில் பேட்டரி சைஸ் சற்றே குறைவாக இருந்தாலும், புதிய பிராசஸர்கள் மூலம் பேட்டரி லைஃப் சிறப்பாக இருக்கும். ஐபோன் 17 தொடரில் 25W முதல் 30W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கபப்ட்டுள்ளது.

ஐபோன் 17e: பட்ஜெட் விலையில் ஆப்பிள் அனுபவம்

குறைந்த விலையில ஆப்பிள் போன் வாங்க வேண்டும் என நினைக்கிறவங்களுக்காகவே ஐபோன் 17e வந்துள்ளது. இதில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, A19 பிராசஸர், 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஆப்பிள் இன்டலிஜென்ஸ் வசதிகள், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களும் இந்த போனில் உண்டு. இதன் ஆரம்ப விலை ரூ.64,900.

24
கூகுள் பிக்சல் 9a: சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்ஷன்

ரூ.50,000-க்குள் ஒரு நல்ல காம்பாக்ட் ஆண்ட்ராய்டு போன் தேடுறீங்களா? அப்படி என்றால் கூகுள் பிக்சல் 9a ஒரு சூப்பர் சாய்ஸ். இதில் 6.3 இன்ச் pOLED டிஸ்ப்ளே, டென்சர் G4 பிராசஸர், 48 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஏழு வருஷத்துக்கு சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கிறதாக உறுதி அளித்துள்ளார்கள். பிக்சல் 9a-வில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

34
விவோ, ஒப்போ போட்டியில் தீவிரம்

விவோ X300 FE, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி மாடல்களும் இந்திய மார்க்கெட்டில் கவனத்தை ஈர்த்துள்ளன. ஹை ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பவர்ஃபுல் பிராசஸர், பெரிய பேட்டரி, சூப்பரான கேமரா செட்டப்ன என்று பல அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக போட்டோகிராஃபி, கேமிங் பிரியர்களுக்கு இந்த போன்கள் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். விவோ மற்றும் ஒப்போ மாடல்களில் 67W முதல் 80W வரையிலான அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

44
காம்பாக்ட் போன்களுக்கு மார்க்கெட்டில் மவுசு குறையவில்லை

பெரிய ஸ்கிரீன் போன்கள் நிறைந்த இந்த காலத்திலும் சின்ன சைஸ் போன்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று இந்த புது மாடல்கள் காட்டுகிறது. இது மட்டுமின்றி இந்த காம்பாக்ட் போன்கள் அனைத்தும் வெறும் 170 முதல் 185 கிராம் வரை மட்டுமே எடை கொண்டவை. இதனால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதற்கோ அல்லது ஒற்றைக் கையில் டைப் செய்வதற்கோ மிகவும் கச்சிதமாகவும், பாக்கெட்டில் வைக்க எளிதாகவும் இருக்கின்றன. பயன்படுத்த எளிமையாக இருப்பதால் இந்தியாவில் காம்பாக்ட் போன்களுக்கு மறுபடியும் முக்கியத்துவம் அதிகமாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories