1. கட்டுப்படுத்தப்பட்ட தரவுப் பகிர்வு (Selective Sharing): பழைய செயலியைப் போல முழு ஆதார் விவரங்களையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஹோட்டல் முன்பதிவு, மருத்துவமனை அனுமதி அல்லது வயதுச் சான்று போன்ற தேவைகளுக்கு, பெயர், புகைப்படம் அல்லது பிறந்த தேதி போன்ற குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பகிரும் வசதி இதில் உள்ளது.
2. க்யூஆர் கோட் சரிபார்ப்பு (QR-based Verification): இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையின் நகலை எங்கும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. செயலியில் உள்ள க்யூஆர் கோடை காண்பித்து அடையாளத்தைச் சரிசெய்து கொள்ளலாம். இந்த அம்சம் இணைய வசதி இல்லாத இடங்களிலும் (Offline) வேலை செய்யும்.
3. முக அங்கீகார வசதி (Face Authentication): முன்பு ஒடிபி (OTP) மட்டுமே முக்கியச் சரிபார்ப்பு முறையாக இருந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக இந்த செயலியில் முக அங்கீகார (Face ID) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
4. பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக்: பயனர்கள் தங்களின் கைரேகை மற்றும் முக அங்கீகாரப் பதிவுகளைத் தேவைக்கேற்ப ஒரே கிளிக்கில் செயலியில் இருந்தபடியே லாக் (Lock) அல்லது அன்லாக் (Unlock) செய்து கொள்ள முடியும். இது தவறான பயன்பாடுகளைத் தடுக்கும்.
5. பயன்பாட்டு வரலாறு (Authentication History): உங்கள் ஆதார் விவரங்கள் எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதைச் செயலியின் மூலம் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
6. ஒரே செயலியில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்: ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) அதிகபட்சமாக 5 ஆதார் ப்ரொஃபைல்களை இந்த ஒரே செயலியில் நிர்வகிக்கலாம்.
7. முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம்: ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், இந்தச் செயலியின் மூலமாகவே முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.