Best 5G Phones Under 10,000: இந்தியாவில் ரூ.10,000க்குள் கிடைக்கும் தரமான டிஸ்பிளே, சூப்பர் கேமரா, பேட்டரி அம்சங்கள் நிறைந்த டாப் 5 சிறந்த 5ஜி போன்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பிஎஸ்என்எல்லை தவிர கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் 5ஜி நெட்வொர்க் வழங்கி வருகின்றன. இதனால் முன்னணி செல்போன் நிறுவனங்கள் நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ரூ.10,000 விலைக்குள் சிறந்த 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் அதிக செயல்திறன், தரமான டிஸ்பிளே மற்றும் 5ஜி வேகம் கொண்ட டாப் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
26
மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G)
குறைந்த பட்ஜெட்டில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட் போனில் 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate)கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமராக்கள் உள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.9,999.
இந்தியாவில் நம்பகமான பிராண்டான சாம்சங்கின் கேலக்ஸி எம்06 5ஜி மாடல் 6.7 இன்ச் HD+ டிஸ்பிளேவுடன் உள்ளது. இதில் 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 5000mAh பேட்டரி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. இந்த போனின் விலை ரூ.9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போகோ நிறுவனத்தின் போகோ சி75 5ஜி மாடல் பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக அமைந்துள்ளது. இதில் 6.6 இன்ச் HD+ IPS LCD திரை, 120Hz ரெப்ரஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் AI மெயின் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ.8,299 முதல் தொடங்குகிறது.
இந்திய நிறுவனமான லாவாவின் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி மாடல் போனில் .67 இன்ச் அளவுள்ள 90Hz அதிவேக LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Dimensity 6300) 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். 5100mAh திறன் கொண்ட நீண்ட ஆயுள் பேட்டரி உள்ளது. ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.9,199.
66
லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G)
இந்திய நிறுவனமான லாவாவின் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போன் 6.56 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் அமைந்துள்ளது. 50 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 5000mAh பேட்டரி வசதிகள் உள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.7,999 ஆகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.