20 வருட உத்தரவாதம்! AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் அதிநவீன பிரிட்ஜ்!

Published : May 29, 2024, 09:03 AM ISTUpdated : May 29, 2024, 09:15 AM IST

தென்கொரிய நிறுவனமான சாம்சங் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் புதிய நவீன ரெஃப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

PREV
17
20 வருட உத்தரவாதம்! AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் அதிநவீன பிரிட்ஜ்!
Samsung refrigerators in India

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் புதிய நவீன ரெஃப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

27
Samsung AI refrigerators with Family Hub Screen

சாம்சங் நிறுவனத்தின் இந்த ரெஃப்ரிஜிரேட்டர்கள் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் இரண்டு விதமான அளவுகளில் வெளியாகி இருக்கிறது. 809 லிட்டர் மற்றும் 650 லிட்டர் அளவுகளில் இந்த ஃபிரிட்ஜ் விற்பனைக்கு உள்ளது.

37
Samsung refrigerators with Inverter compressor

இந்த ஃபிரிட்ஜில் உள்ள இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு சாம்சங் நிறுவனம் 20 ஆண்டு உத்திரவாதம் அளிக்கிறது. இன்வெர்ட்டர் கம்ப்ரஸர் இருப்பதால் இயங்கும்போது மிகக் குறைவான ஒலியையே எழுப்பும்.

47
Samsung fridge with AI powered compressor

மின்சார பயன்பாடு மிகக் குறைவுதான். 10% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று சாம்சங் கூறுகிறது. ஆனால், சிறப்பான குளிர்ச்சியையும் தொடர்ச்சியாக வழங்கும். இந்த ரெஃப்ரிஜிரேட்டரில் 80 செ.மீ. அளவில் ஃபேமிலி ஹப் ஸ்கிரீன் (Family Hub Screen) எனப்படும் டிஜிட்டல் திரை ஒன்றும் உள்ளது. இதன் மூலம் உள்ளே இருக்கும் பொருட்களை, கதவைத் திறக்காமலேயே தெரிந்துகொள்ளலாம்.

57
Samsung refrigerator with AI Vision Inside

இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஏ.ஐ. விஷன் இன்சைடு (AI Vision Inside) அம்சம் உள்ளது. இது பிரிட்ஜில் வைக்கும் 33 விதமான உணவுப் பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளும். அந்த உணவுப் பொருள்களை பயன்படுத்தி என்ன உணவு சமைக்கலாம் என்று சமையல் குறிப்புகளையும் கொடுக்கும்.

67
Samsung refrigerator with Wi-Fi connectivity

650 லிட்டர் மாடல் வை-ஃபை இணைப்பு வசதியையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனுடன் ரெஃப்ரிஜிரேட்டரை இணைத்து செட்டிங்ஸை தூரத்தில் இருந்தே நிர்வகிக்கலாம்.

77
Samsung refrigerators price and specs

சாம்சங்கின் இந்த அதிநவீன ரெஃப்ரிஜிரேட்டரின் 809 லிட்டர் மாடல் ரூ.3,55,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 650 லிட்டர் மாடல் ரூ.1,88,900 விலையில் விற்பனைக்கு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories