ரொம்ப ஆபத்தான கேஜெட்ஸ்... இதெல்லாம் அமேசான்ல சர்வசாதரணமா கிடைக்குது!

Published : May 27, 2024, 02:16 PM IST

பலவிதமான கேஜெட்களை விற்பனை செய்யும் அமேசான் இணையதளத்தில் சில ஆபத்தான சாதனங்களும் விற்பனைக்கு உள்ளன.

PREV
110
ரொம்ப ஆபத்தான கேஜெட்ஸ்... இதெல்லாம் அமேசான்ல சர்வசாதரணமா கிடைக்குது!
Dangerous Gadgets in Amazon

பலவிதமான கேஜெட்களை விற்பனை செய்யும் அமேசான் இணையதளத்தில் சில ஆபத்தான சாதனங்களும் விற்பனைக்கு உள்ளன. இவை குறித்து தொழில்நுட்ப வல்லுநர் தன்வீர் அஞ்சும் (@codemindtanvir) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

210
Deauther Watch

இந்த வாட்ச் வைஃபை சாதனங்களை அவற்றின் நெட்வொர்க்கிலிருந்து துண்டிக்க முடியும். இவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால் இவை தடை செய்யப்பட்டுள்ளன.

310
License Plate Hider

இந்த கேஜெட்டில் ஒரு பட்டனை அழுத்தினால் போதும லைசென்ஸ் பிளேட்டை மறைத்துவிடலாம். இதை பயன்படுத்துவது சட்டவிரோதமானது. ஆனால் இது இன்னும் அமேசானில் கிடைக்கிறது.

410
High Powered Laser

இது சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் லேசர் பாயிண்டர் அல்ல. இது மிகவும் சக்திவாய்ந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இது தடைசெய்யப்பட்டுள்ளது.

510
Emergency Strobe Lights

இந்த விளக்குகள் பொதுவாக அவசரகால வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இதை அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

610
Spy Glasses

இந்த உளவு பார்க்கும் கண்ணாடிகள் ரகசியமாக படம்பிடிப்பதற்கான சிறிய கேமராவைக் கொண்டது. தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக இவற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

710
GSM Jammer

ஜிஎஸ்எம் ஜாமர் செல்போன் சிக்னல்களைத் தடுக்கும். இதையும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால் தடை செய்திருக்கிறார்கள்.

810
Flipper Zero

ஃபிளிப்பர் ஜீரோ என்ற இந்த சாதனம் டிஜிட்டல் சாதனங்களுக்கான உலகளாவிய ரிமோட் கன்ட்ரோல் போல செயல்படும். இது தவறாக பயன்படுத்தப்படுவதால் தடை செய்யப்பட்டுள்ளது.

910
WiPhone

வை-ஃபோன் என்பது ஹேக்கர்களுக்காக வடிவமைக்கப்பட்ட போன். ஹேக்கர்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தடை செய்யப்பட்டுள்ளது.

1010
RFID-NFC Skimmer

RFID-NFC ஸ்கிம்மர் என்ற சாதனம் மூலம் RFID மற்றும் NFC கார்டுகளில் இருந்து தரவைப் படிக்க முடியும். இதையும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories