வெறும் 1199 ரூபாய்க்கு ஸ்மார்ட்வாட்ச்! மிஸ் பண்ணாம உடனே ஆர்டர் பண்ணுங்க...

First Published | May 23, 2024, 12:30 PM IST

மேப் மை இந்தியா நேவிகேஷனுடன் பெரிய டிஸ்பிளே கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்வாட்சை போட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

QR Tray, Boat Wave Sigma 3, Boat Wave Sigma 3 Specifications, Boat Wave Sigma 3 Price in India, Crest App, DIY Watch Face Studio, Crest+ OS, Boat smartwatch

போட் நிறுவனம் போட் வேவ் சிக்மா 3 (Boat Wave Sigma 3) என்ற புதிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2.01 இன்ச் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்டார்ட்வாட்ச் க்ரெஸ்ட்+ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த வாட்ச் அலுமினிய அலாய் கேஸைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்டல் மற்றும் சாஃப்ட் சிலிகான் ஸ்டிராப்களுடன் கிடைக்கிறது. ஆக்டிவ் பிளாக், மெட்டல் பிளாக், மெட்டல் கிரே, கூல் கிரே, செர்ரி ப்ளாசம், ரஸ்டிக் ரோஸ் மற்றும் சஃபையர் ப்ரீஸ் என ஏழு நிறங்களில் விற்பனைக்கு உள்ளது.

QR Tray, Boat Wave Sigma 3, Boat Wave Sigma 3 Specifications, Boat Wave Sigma 3 Price in India, Crest App, DIY Watch Face Studio, Crest+ OS, Boat smartwatch

பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா போன்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் ஆஃப்லைனில் தேர்ந்தெடுக்கப்பட்ட எலக்ட்ரானிக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

போட் வேவ் சிக்மா ஸ்மாட்வாட்ச் 3 240 x 240 பிக்சல்கள் ரெசொல்யூஷன் கொண்ட 2.01-இன்ச் ஸ்குவாரிஷ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த வாட்ச் DIY வாட்ச் ஃபேஸ் ஸ்டுடியோவுடன் வருவதால் இதை விருப்பத்திற்கு ஏற்ப பல விதமாக மாற்றி அமைக்க முடியும்.

க்ரெஸ்ட் ஆப் மூலம் சேமிக்கப்பட்ட முக்கியமான தகவல்களை எளிதாக அணுகுவதற்கு QR ட்ரே உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப் கொண்டது. புளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தினாலும் 2 நாட்கள் பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவையில்லை.

Tap to resize

QR Tray, Boat Wave Sigma 3, Boat Wave Sigma 3 Specifications, Boat Wave Sigma 3 Price in India, Crest App, DIY Watch Face Studio, Crest+ OS, Boat smartwatch

MapmyIndia மூலம் இயக்கப்படும் டர்ன்-பை-டர்ன் (turn-by-turn) நேவிகேஷன் வசதியும் இருக்கிறது. தூசி மற்றும் நீரால் பாதிக்கப்படாதல் இருப்பதற்கான iP67 தரச்சான்று இருக்கிறது. எந்த வகையான வானிலையிலும் பயன்படுத்தப்படலாம். இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO2 ரீடிங் போன்ற பல ஃபிட்னஸ் வசதிகளும் உள்ளன. க்ரெஸ்ட் ஆப் மூலமும் இந்த விவரங்களைப் பார்க்கலாம். 

அவசரகால SOS, கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல், தொலைந்த வாட்ச் அல்லது மொபைலை கண்டறியும் வசதி ஆகிய பல்வேறு பயனுள்ள அம்சங்களும் உள்ளன. இத்தனை வசதிகள் கொண்ட பட்ஜெட் ஸ்டார்ட்வாட்ச் ரூ.1,199 அறிமுக விலையில் வெளியாகியிருக்கிறது. இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். பிறகு இதன் விலை ரூ.1,500 ஆக உயர்ந்துவிடும்.

Latest Videos

click me!