வெறும் 500 க்கு கிடைக்கும் மினி ஏசி! கோடையில் சூட்டைத் தணிக்கும் கூலான ஐடியா!

First Published | May 2, 2024, 8:46 PM IST

கோடை காலத்தில் ஏசி போன்ற விலை உயர்ந்த குளிர் சாதனங்களை வாங்க முடியாதவர்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஏர் கூலர்களை வாங்கலாம்.

Mini air cooler

கோடை வெப்பம் நாளுக்கு நாள் உயரும் நிலையில், இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரமும் தொடங்க உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்க பல வழிகளில் குளிர்ச்சியைத் தேடுகிறார்கள். இந்தச் சூழலில் ஏசி போன்ற விலை உயர்ந்த குளிர் சாதனங்களை வாங்க முடியாதவர்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஏர் கூலர்களை வாங்கலாம்.

Mini air cooler

மினி ஏசி என்று அழைக்கப்படும் இந்த குட்டியான ஏர் கூலர்கள் ரூ.499 முதல் ரூ.,2000 வரை வெவ்வேறு மாடல்களில் கிடைக்கின்றன. அந்த மினி ஏசி அதிக மின்சாரத்தை பயன்படுத்தாது என்பதால் மின்கட்டணம் உயர்ந்துவிடும் என்று கவலைப்படவும் தேவையில்லை.

Tap to resize

Mini air cooler

AOXITO மினி கூலர் அமேசான் தளத்தில் ரூ.499 விலையில் கிடைக்கிறது. யுஎஸ்பி மற்றும் பேட்டரியில் இயங்கும் இந்த கூலர் 10 மணிநேரம் வரை தாக்குப்படிக்கும். அடிக்கடி தண்ணீர் ஊற்றவேண்டியது இல்லை.

Mini air cooler

யுஎஸ்பி டெஸ்க் ஃபேன் கொண்ட NTMY மினி ஏர் கூலரில் எல்இடி லைட்டும் உள்ளது. 3 ஸ்பிரே மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தண்ணீர், ஐஸ் க்யூப் இரண்டையும் பயன்படுத்தலாம். இது 12 மணிநேரம் வரை நீடித்திருக்கும். விலை ரூ.1,187.

Mini air cooler

SKYUP மினி ஏர் கூலர் ரூ.1,848 விலையில் கிடைக்கிறது. சில வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் தரப்படுகிறது. 600 மி.லி. வாட்டர் டேங்க், 7 லைட்ஸ் மோட் என பல அம்சங்கள் கொண்ட மினி ஏசி இது. மின்சாரத்தையும் அதிகமாக சேமிக்கிறது.

Mini air cooler

இப்போது வரும் பல மினி ஏசி மாடல்களில் ஹைட்ரோ-சில் தொழில்நுட்பம், டூயல் கூலிங் ஜெட் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. இதன் மூலம் குறைந்த செலவில் ஏசி போன்ற குளுமையை அனுப்பவிக்க முடியும்.

Latest Videos

click me!