ஒவ்வொரு வீட்டிலும் இது இருக்கணும்! ஜுஜூபி விலையில் சோலார் வயர்லெஸ் சிசிடிவி கேமரா!

First Published | May 13, 2024, 1:24 PM IST

சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் அவுட்டோர் செக்யூரிட்டி கேமராக்களை விற்பனையை செய்து வருகிறது. BW300 என்ற புதிய மாடல் சிசிடிவி கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Mi Wireless Outdoor Security Camera

BW300 அவுட்டோர் கேமராவில் 2K HD ஃபுல் கலர் விஷன் வீடியோ வசதி வருகிறது. இதனால் இந்தக் கேமரா காட்சிகளைத் தெளிவான பதிவுசெய்யும். 3MP கேமராவில் 130 டிகிரி வரையில் பீல்ட் கவரேஜ் கிடைக்கும். ஸ்மார்ட் ஃபுல்-கலர் நைட் விஷன் அம்சம் காரணமாக, இரவு நேரங்களிலும் தெளிவான வீடியோ ரெக்கார்டிங் செய்யக்கூடியது. பிளாக் அண்ட் ஒயிட் வீடியோ பதிவுசெய்யும் அம்சமும் உள்ளது.

Xiaomi CCTV

செயற்கை நுண்ணிறவு அடிப்படையிலான மோஷன் கேப்ச்சர் டிராக்கிங் அம்சமும் கொண்டது. இதனால், கேமராவுக்கு முன் யாராவது நடமாடினால் அதை டிராக் செய்துவிடும். மழை, வெயில், பனி என எந்த வானிலையிலும் பாதிக்காத வகையில் பிரத்யேகமான வடிவமைப்பு கொண்டிருக்கிறது. தூசி மற்றும் நீரினால் சேதம் அடையாத வகையில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட் அம்சம் உள்ளது.

Tap to resize

Xiaomi Outdoor Camera BW300

இந்த சிசிடிவி கேமரா 4900mAh பேட்டரியுடன் வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 180 நாட்கள், அதாவது 6 மாதங்களுக்கு பேட்டரி பேக் நீடித்திருக்கும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம். 5W சோலார் பேனல் ஆப்ஷனும் இருகிகறது. இதனால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் அவுட்டோர் கேமராவை பயன்படுத்த முடியும். கூகுள் ஹோம், அமேசானின் அலெக்சாவுடன் இணைத்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

Xiaomi Security Camera, Xiaomi Outdoor Camera BW300, CCTV, Security Camera, Mi Wireless Outdoor Security Camera

ஸ்மார்ட்போன் ஆப் மூலம் காட்சிகளை லைவ் வீடியோவாகப் பார்த்து கொள்ளலாம். மோஷன் டிடெக்‌ஷன், வைக்கிள் டிடெக்‌ஷன் குறித்து நோட்டிபிகேஷன்களும் வந்துவிடும். கேமரா முன் இருப்பவர்களிடம் எச்சரிக்கைச் செய்திகளையும் ஒலிபரப்பும் வசதியும் உள்ளது.

Xiaomi Security Camera

இப்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சிசிடிவி செக்யூரிட்டி கேமரா, வரும் வாரங்களில் இந்தியாவுக்கும் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.5 ஆயிரம் வரை இருக்கலாம்.

Latest Videos

click me!