புதிய சியோமி ஸ்மார்ட் டிவி... 150 லைவ் ஸ்ட்ரீம் சேனல்கள்... தம்மா துண்டு விலையில் வீட்டயே தியேட்டர் ஆக்கலாம்!

First Published | May 23, 2024, 4:48 PM IST

Xiaomi Smart TV A Series 2024: சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியின் ஏ சீரிஸ் புதிய எடிஷனை பதிப்பை வெளியிட உள்ளது. இது கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட் டிவியின் அட்டேட் செய்யப்பட்ட வடிவமாக இருக்கலாம்.
 

Xiaomi Smart TV A

சியோமியின் புதிய ஸ்மார்ட் டிவி 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.12,999 மட்டுமே. இந்த சியோமி ஸ்மார்ட் டிவியை அமேசானிலும் சியோமியின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் வாங்கலாம். 40 இன்ச் மாடல் ரூ.22999, 43 இன்ச் மாடல் ரூ.24999 விலையில் விற்பனைக்கு உள்ளன.

Xiaomi Smart TV A

சென்ற வருடம் வந்த சியோமி A சீரிஸ் ஸ்டார்ட் டிவியில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இந்த புதிய எடிஷன் வெளியாகிறது. 40 மற்றும் 43 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல்களுக்கு குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 செயலியை நிறுவியுள்ளது, அதே நேரத்தில் 32 இன்ச் மாடலில் கார்டெக்ஸ் A35 உள்ளது.

Tap to resize

Xiaomi Smart TV A

இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் Xiaomi TV+ அம்சத்தை பயன்படுத்தி 150க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களைப் பார்க்கலாம்.32-இன்ச் மாடலில் HD தரத்திலும், மற்ற இரண்டு மாடல்களில் FHD தரத்துடம் வீடியோ காட்சிகளைக் காணலாம். 32 இன்ச் மாடலில் 1 GB RAM உள்ளது. மற்ற இரண்டு மாடல்களில் 1.5 GB RAM உள்ளது. எல்லா மாடல்களிலும் ஸ்டோரேஜ் 8 GB தான்.

Xiaomi Smart TV A

இந்த சியோமி டிவி 20W ஆடியோ அவுட்புட் கொண்டது. Dolby Audio மற்றும் DTS:X அம்சங்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். புளூடூத் 5.0, 2 HDMI போர்ட், WiFi, USB 2.0 மற்றும் ஈதர்நெட் போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Latest Videos

click me!