2024 விற்பனையில் மாஸ் காட்டிய ஐபோன்கள்; மற்ற போன்கள் பக்கத்துல கூட வர முடியல!

Published : Feb 04, 2025, 01:26 PM IST

20204ம் ஆண்டு ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் ஆப்பிள் ஐபோன்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

PREV
14
2024 விற்பனையில் மாஸ் காட்டிய ஐபோன்கள்; மற்ற போன்கள் பக்கத்துல கூட வர முடியல!
2024 விற்பனையில் மாஸ் காட்டிய ஐபோன்கள்; மற்ற போன்கள் பக்கத்துல கூட வர முடியல!

உலகம் முழுதும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் உலகை ஆட்டிப்படைக்கின்றன. அதுவும் மிக உயர்தரமான ஆப்பிள் ஐபோன்களை வைத்திருப்பது கவுரவம் என்ற நிலைக்கு உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய ஸ்மார்போன்கள் குறித்து பார்க்கலாம். 

2024ம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 15 முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸின் கூற்றுப்படி, 2024ம் ஆண்டில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஆப்பிள் ஐபோன்கள் ஏழு இடங்களைப் பிடித்து, ஸ்மார்ட்போன் துறையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

24
ஐபோன்கள் விற்பனை

இந்த 7 ஆப்பிள் போன்களின் விற்பனையில் ஐபோன் 15 டாலர் முதலிடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை உள்ளன. செப்டம்பர் 2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஐபோன் 16 சீரிஸ் மாடல் போன்களும் இந்த விற்பனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆப்பிளின் நெருங்கிய போட்டியாளரான சாம்சங் இந்த பட்டியலில் மூன்று இடங்களை பிடித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ15 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடல்கள் இந்த பெருமையை பெற்றுள்ளன. உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தை 2024 விற்பனையை பொறுத்தவரை 7% அதிகரிப்பை கண்டுள்ளது. உலகளவில் மொத்தம் 1.22 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!

34
2024 ஸ்மார்ட்போன்கள் விற்பனை

ஆப்பிள் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், அதன் ஏற்றுமதி 1 சதவீதம் குறைந்து 225.9 மில்லியன் யூனிட்டுகளாக உள்ளது. சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரை 222.9 மில்லியன் யூனிட்டுகளை ஏற்றுமதி செய்து 2வது இடத்தில் இருக்கிறது.

சியோமி நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஏற்றுமதியில் 15% அதிகரிப்புடன் 168.6 மில்லியன் யூனிட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. டெக்னோ, இன்ஃபினிக்ஸ் மற்றும் ஐடெல் நிறுவனங்களைச் சேர்ந்த டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 

44
சாம்சங் போன்கள்

. 2024ம் ஆண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:‍ 

1.ஐபோன் 15
2.ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்
3.ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
4.சாம்சங் கேலக்ஸி ஏ15
5.ஐபோன் 16 ப்ரோ
6.ஐபோன் 15 ப்ரோ
7.ஐபோன் 16
8.சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி
9.சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா
10. ஐபோன் 13

Malware: ஸ்மார்ட்போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ எளிய வழிகள்!
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories