Best Smartphones: டாப் 5 கேமரா போன்கள் லிஸ்ட்; எக்கச்சக்க சிறப்பம்சங்கள்!

Published : Feb 03, 2025, 02:11 PM IST

இந்தியாவில் வாங்க கிடைக்கும் சிறந்த 5 கேமரா ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்த பட்டியலில் விவோ, சாம்சங் உள்ளிட்ட முக்கியமான போன்கள் உள்ளன. 

PREV
16
Best Smartphones: டாப் 5 கேமரா போன்கள் லிஸ்ட்; எக்கச்சக்க சிறப்பம்சங்கள்!
சிறந்த கேமரா போன்கள்

ரூ.50,000க்குள் சிறந்த கேமரா போனைத் தேடுகிறீர்களா? புகைப்பட ஆர்வலராக இருந்தாலும் சரி, சாதாரண பயனராக இருந்தாலும் சரி, இந்த விலை வரம்பில் உள்ள ஸ்மார்ட்போன்கள் உயர்தர படங்களை வழங்குகின்றன.

26
ஹானர் 200 ப்ரோ

Honor 200 Pro சிறந்த செயல்திறன் மற்றும் அருமையான கேமராவை விரைவான சார்ஜிங் திறனுடன் இணைக்கிறது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளதால் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 6.7 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. 125 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. 

36
விவோ வி40 ப்ரோ

Vivo V40 Pro அற்புதமான செல்ஃபிக்களுக்கு 50 MP முன் கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் சிறந்த புகைப்பட மேம்பாடுகளுக்கான மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பங்களை வழங்குகிறது. மேலும் 50 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்பிளே, பாஸ்ட் சார்ஜிங் வழங்கும் Li-Ion 5500 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. Ganges Blue, Titanium Gray, Moonlight White ஆகிய 3 வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கிறது. 

46
ஒன்பிளஸ் 12R

OnePlus 12R என்பது 5500mAh பேட்டரி மற்றும் சிறந்த கேமரா அமைப்புடன் கூடிய மலிவு விலை தேர்வாகும். இந்த போனில் 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி என டிரிபிள் கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது.  16 எம்பி செல்பி கேமராவும் கொடுப்பட்டுள்ளதால் சிற்நத புகைப்படங்களை, வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மற்ற அம்சங்களை பொறுத்தவரை 6.68 இன்ச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ், tereo speakers உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 

56
சியோமி 14

Xiaomi 14ல் சிறந்த புகைப்படங்களுக்கான மூன்று லென்ஸ்கள் மற்றும் 8K வீடியோ பதிவு திறன் உள்ளது. இந்த மாடலில் 50 எம்பி + 50 எம்பி + 50 எம்பி என்ற டிரிபிள் கேமரா செட் அப் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் சக்திவாய்ந்த Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். மேலும் 6.36 இன்ச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் உள்ளன. 

66
சாம்சங் கேலக்ஸி A55

Samsung Galaxy A55ல் சிறந்த செல்ஃபிக்களுக்கு 32 MP முன் கேமரா மற்றும் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த படங்களை எடுக்க OIS உள்ளது. மெயின் கேமராவை பொறுத்தவரை 50 எம்பி + 12 எம்பி + 5 எம்பி கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் Fingerprint, Li-Ion 5000 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

click me!

Recommended Stories