ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை 2026-ல் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 7.58 இன்ச் பெரிய உள் திரை மற்றும் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா போன்ற அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், டெக் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. iPhone Fold என அழைக்கப்படும் இந்த புதிய மாடல், 2026 ஆம் ஆண்டு வெளியீட்டு ஆண்டு வரிசையில் இடம்பெறும் என சீனாவிலிருந்து வெளியான புதிய வெளியீடுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இதுவரை ஃபோல்டபிள் போன் சந்தையில் கால் வைக்காத ஆப்பிள், நேரடியாக ஆண்ட்ராய்டு நிறுவனங்களுடன் தயாராக உள்ளது.
24
iPhone Fold ஸ்பெக்ஸ்
இந்த புதிய ஐபோனில் பயோமெட்ரிக் அம்சங்களில் பெரிய மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. Weibo-வில் வெளியான தகவலின்படி, iPhone Fold-ல் Face ID இடம்பெறாது. அதற்கு பதிலாக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட டச் ஐடி (கைரேகை சென்சார்) வழங்கப்படலாம். மெல்லிய வடிவமைப்பை உறுதி செய்ய ஃபேஸ் ஐடி ஹார்ட்வேர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பில், iPhone Fold ஒரு “புக்-ஸ்டைல்” மடிக்கக்கூடிய போன் ஆக இருக்கும்.
34
iPhone Fold லீக்
இதில் உள்ளே திறக்கும் போது 7.58 இன்ச் அளவிலான பெரிய மெயின் ஸ்கிரீன் கிடைக்கும். இது இதுவரை வெளியான ஐபோன்களில் மிகப்பெரிய திரையாக இருக்கும். வெளியே பயன்படுத்துவதற்காக 5.25 இன்ச் கவர் ஸ்கிரீனும் வழங்கப்படும். உள்ளக திரையில் அண்டர்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா இருப்பதால், நோச் அல்லது பஞ்ச்-ஹோல் இல்லாத முழு திரை அனுபவம் கிடைக்கும். மேலும், திரை மடிப்பு கோடு (crease) தெரியாமல் இருக்க Corning, SCHOTT போன்ற நிறுவனங்களின் சிறப்பு கண்ணாடிகளை ஆப்பிள் பயன்படுத்தலாம் என தகவல்கள் கூறுகின்றன.
கேமரா பகுதியில், iPhone Fold-ல் இரட்டை கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஒரு 48MP சென்சார் இடம்பெறும். 2026 ஆம் ஆண்டு ஆப்பிளுக்கு பெரிய ஆண்டாக இருக்கும் என்றும், அதே ஆண்டில் iPhone 17e (பேட்ஜெட் மாடல்), iPhone 18 Pro, iPhone 18 Pro Max ஆகியவற்றுடன் இந்த iPhone Fold அல்லது “iPhone Ultra” என்ற பெயரில் இது அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.