மேலும், பிக்சல் 9 சீரீஸ் போன்களிலும் இந்த விற்பனையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. பிக்சல் 9 இப்போது ரூ.79,999க்கு பதிலாக ரூ.58,399 எந்த விலையில் கிடைக்கிறது. பிக்சல் 9 Pro Fold மாடல் ரூ.1,62,999 ஆகவும், பிக்சல் 9a மாடல் ரூ.44,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் ப்ரீமியம் பிக்சல் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த விலைகள் மிகவும் ஈர்க்கக்கூடியவையாக உள்ளன. கூகுள் ஆக்சசெரீஸ்களிலும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிக்சல் Watch 3-ன் விலை சுமார் ரூ.5,000 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.22,915க்கு கிடைக்கிறது. மேலும், பிக்சல் Buds Pro 2 இப்போது ரூ.19,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பிக்சல் 10 சீரிஸ் ஆகஸ்ட் 20 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன்கள் அனைத்தும் கூகுளின் புதிய டென்சர் 5 சிப்செட் மூலம் இயங்குகின்றன. AI அம்சங்கள் மற்றும் கேமரா செயல்திறனில் கவனம் செலுத்தும் இந்த சீரியஸ், தற்போதைய தள்ளுபடியில் வாங்க சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது.