லெனோவா நிறுவனம் தனது புதிய பிரீமியம் டேப்லெட்டான லெனோவா ஐடியா டேப் பிளஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் 12.1 இன்ச் பெரிய டிஸ்ப்ளே, 10,200mAh சக்திவாய்ந்த பேட்டரி உடன் வருகிறது.
லெனோவோ நிறுவனம் தனது புதிய பிரீமியம் டேப்லெட்டான லெனோவா ஐடியா டேப் பிளஸ் (Lenovo Idea Tab Plus)-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியான Lenovo Idea Tab மாதலின் மேம்பட்ட பதிப்பாக இது சந்தையில் வந்துள்ளது. பெரிய டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் புதிய தலைமுறை பிராசசர் ஆகியவற்றுடன் இந்த டேப்லெட் உள்ளது. உலக சந்தையில் செப்டம்பர் மாதமே அறிமுகமான இந்த மாடல், தற்போது இந்திய பயனர்களுக்கும் கிடைக்கிறது.
24
12.1 இன்ச் டேப்லெட்
லெனோவா ஐடியா டேப் பிளஸ் விலை இந்தியாவில் ரூ.27,999 முதல் தொடங்குகிறது. இந்த விலையில் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட Wi-Fi மற்றும் 5G வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வைஃபை வேரியண்ட் ரூ.30,999 என்ற விலையில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களுடனும் Tab Pen stylus பாக்ஸிலேயே வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் தற்போது முன்பதிவிற்கு திறக்கப்பட்டு, டிசம்பர் 22 முதல் Lenovo இணையதளம் மற்றும் Amazon வழியாக விற்பனைக்கு வரும். ஒரே Luna Grey நிறத்தில் மட்டுமே இது கிடைக்கிறது.
34
10,200mAh பேட்டரி
ஸ்பெசிபிகேஷன்களைப் பார்த்தால், Lenovo Idea Tab Plus-ல் 12.1 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2.5K ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் காரணமாக வெளிச்சத்திலும் திரை தெளிவாக இருக்கும். இதன் உள்ளே MediaTek Dimensity 6400 ப்ராசஸர், அதிகபட்சம் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த டேப்லெட் Android 15 உடன் வருகிறது.
கேமரா பகுதியில், பின்புறம் 13MP கேமரா, முன்புறம் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்காக Wi-Fi 802.11 a/b/g/n/ac, 5G (LTE மாடலில்) மற்றும் Bluetooth 5.2 ஆதரவு உள்ளது. 10,200mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த டேப்லெட்டின் முக்கிய பலமாகும். 540 கிராம் எடையுடன் வரும் இந்த டேப்லெட்டில் Lenovo NotePad, Circle to Search, Gemini போன்ற ஸ்மார்ட் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.