Apple iPhone leaks : ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அப்டேட்.! ஆப்பிள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!

Published : May 16, 2026, 11:43 AM IST

ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் 18 ப்ரோ மூன்று முக்கிய பிரிவுகளில் அப்டேட்களுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதுதொடர்பான லீக் தகவல்கள் வெளியாகி உள்ளது.

PREV
13
ஐபோன் 18 ப்ரோவில் 3 பெரிய அப்டேட்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிரீமியம் ஸ்மார்ட்போனாகக் கருதப்படும் ஐபோன் 18 ப்ரோ குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகலாம் என கூறப்படும் இந்த மாடலில், கேமரா, பேட்டரி மற்றும் டிசைன் என மூன்று முக்கிய மாற்றங்கள் இடம்பெறும் என தொழில்நுட்ப வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, இந்த அப்டேட்கள் ஐபோன் ரசிகர்களை புதிய மாடலுக்கு அப்கிரேடு செய்ய தூண்டும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த முறை கேமரா பிரிவில் ஆப்பிள் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய கேமராவில் “வேரியபிள் அபெர்ச்சர்” வசதி இடம்பெற வாய்ப்பு உள்ளது.

23
விரைவில் வெளியாகும் ஐபோன் 18 ப்ரோ

இதன் மூலம், போட்டோக்களில் பின்னணி மங்கலாக்கத்தை பயனர்கள் துல்லியமாக கட்டுப்படுத்த முடியும். மேலும், மேம்படுத்தப்பட்ட டெலிபோட்டோ லென்ஸ் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான படங்களை எடுக்க உதவும் என கூறப்படுகிறது. 4x மற்றும் 8x ஜூம் வசதிகளும் இதில் இடம்பெறலாம் என லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனும் சேர்க்கப்படலாம் என்பதால், மொபைல் புகைப்பட அனுபவம் இன்னும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி திறனிலும் ஐபோன் 18 ப்ரோ புதிய சாதனை படைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி இந்த மாடலில் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

33
ஆப்பிள் ரசிகர்கள் உற்சாகம்

இதனுடன் வரும் A20 ப்ரோ சிப் மற்றும் புதிய C2 மோடம், மின்சார பயன்பாட்டை குறைத்து நீண்ட நேர பேட்டரி பேக்கப்பை வழங்க உதவும். குறிப்பாக, இதுவரை குவால்காம் 5ஜி மோடம்களை பயன்படுத்தி வந்த ஆப்பிள், தற்போது தனது சொந்த மோடம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. டிசைன் பிரிவிலும் சில புதிய மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. டீப் ரெட், டீப் பர்பிள், காபி மற்றும் டார்க் செர்ரி போன்ற புதிய நிறங்களில் இந்த மாடல் வெளியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், டைனமிக் ஐலேண்ட் பகுதி முந்தைய மாடல்களை விட மெல்லியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது லீக் அடிப்படையிலானவை மட்டுமே. ஆப்பிள் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories