Smartphone Price Hike : மொபைல் வாங்க நினைப்பவர்களுக்கு ஷாக்.. ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை உயர்ந்த ஸ்மார்ட்போன் விலை

Published : May 13, 2026, 04:36 PM IST

இந்தியாவில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் சிப்களின் உலகளாவிய தட்டுப்பாட்டால் மொபைல் போன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பட்ஜெட் போன்களின் விற்பனை 59% சரிந்துள்ளதுடன், பல மாடல்களின் விலை ரூ.3,500 வரை அதிகரித்துள்ளது.

PREV
15
மொபைல் விலை உயர்வு

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக மொபைல் போன்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (IDC) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பட்ஜெட் போன்களின் விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 59 சதவீதம் வரை குறைந்துள்ளது.

25
5ஜி போன் விலை

இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மெமரி சிப்களின் உலகளாவிய தட்டுப்பாடு பார்க்கப்படுகிறது. தற்போது AI டேட்டா சென்டர்களுக்கான தேவைகள் வேகமாக அதிகரித்து வருவதால், மெமரி சிப் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் அந்த துறைக்கே சிப்களை ஒதுக்கி வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள் பற்றாக்குறையாகி, அதன் தாக்கம் நேரடியாக மொபைல் சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

35
பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் போன்கள் விலை ஏற்றம்

இந்தியாவில் பல பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களின் விலை ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை உயர்ந்துள்ளது. சில மாடல்களில் இதைவிட அதிகமான விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதியதாக வெளியாகும் மாடல்களுக்கும், ஏற்கனவே சந்தையில் விற்பனையாகும் போன்களுக்கும் இந்த விலை உயர்வு அமலாகியுள்ளது. இதனால் பலர் புதிய போன்களை வாங்காமல், தங்களிடம் உள்ள பழைய மாடல்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

45
இந்தியாவில் விலை உயர்வால் சரிந்த விற்பனை

சப்ளை செயின் பிரச்சனைகள் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் உற்பத்தி செலவுகளும் அதிகரித்துள்ளன. உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், போன்களின் விலையை உயர்த்துவதைத் தவிர நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக 15,000 ரூபாய் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கலாம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

55
ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலை அதிகரிக்கலாம்

தற்போதைய நிலை நீடித்தால், எதிர்காலத்தில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலையே ரூ.20,000 வரை உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக செகண்ட் ஹேண்ட் மொபைல் சந்தைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பயன்படுத்தப்பட்ட 5ஜி போன்களுக்கு வரும் மாதங்களில் தேவை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories