ஆப்பிள் தயாரிப்பில் முதல்முறை! வெற லெவல் ஃபோல்டபிள் டிவைஸ்!

First Published | Dec 16, 2024, 10:18 PM IST

சமீபத்திய iPad Pro M4 13-இன்ச் திரையுடன் மிகப்பெரியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள் ஐபாட்கள் மிகப் அளவில் பெரிதாகிக்கொண்டே வருகின்றன.

Apple first foldable

சமீபத்திய iPad Pro M4 13-இன்ச் திரையுடன் மிகப்பெரியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள் ஐபாட்கள் மிகப் அளவில் பெரிதாகிக்கொண்டே வருகின்றன. ப்ளூம்பெர்க் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஆப்பிள் வெளியிட இருக்கும் மடிக்கக்கூடிய ஐபாட் மூலம் திறக்கும் போது 18.8 இன்ச் டச் டிஸ்ப்ளேவாக மாறும். இது மிகப்பெரிய மேக்புக் ப்ரோவை விட பெரியதாக மாறும்.

Apple first foldable ipad

இந்த ஐபாட் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய டிவைஸ் ஆக இருக்கும். இரண்டு ஐபாட்கள் அருகருகே வைக்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும். தவிர, பெரும்பாலான மடிக்கக்கூடிய சாதனங்களில் இருக்கும் கிரீஸ் சிக்கலுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் ஃபோல்டபிள் ஐபோனில் ஃபிளிப்-ஸ்டைல் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஐபாட் 2026ஆம் ஆண்டில்தான் வெளியாகும் என்று தெரிகிறது.

Tap to resize

Apple first foldable software

தற்போது வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும் மடிக்கக்கூடிய iPad 2026 அல்லது 2027 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மென்பொருளைப் பொறுத்தவரை இது iPadOS மற்றும் macOS இரண்டிலிருந்தும் பல அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நேட்டிவ் மேகோஸ் ஆப்ஸ் கூட செயல்படும்.

Apple first foldable Display

தற்போதைய iPad Pro போன்று, மடிக்கக்கூடிய iPad ஆனது OLED திரையுடன் வரும், இது மடிக்கக்கூடிய சாதனத்தின் இன்றியமையாத அங்கமாகும். சரியான ஹார்டுவேர் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இது வெளியிடப்படும் நேரத்தில் சமீபத்திய M சீரிஸ் சிப் மூலம் இயக்கப்படும் எனத் தெரிகிறது. சமீபத்திய போக்குகளை மனதில் கொண்டு, இது 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Apple first foldable ipad price

13-இன்ச் ஐபேட் ப்ரோ விலை ரூ.99,900 இல் தொடங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, மடிக்கக்கூடிய ஐபேட் குறைந்தபட்சம் அந்த விலையில் இருமடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Latest Videos

click me!