Airtelன் அசத்தலான 2 ஜிபி ஸ்கீம்: அன்லிமிடட் கால்ஸ், 2ஜிபி டேட்டா - விலை எவ்வளவு தெரியுமா?

Published : Dec 16, 2024, 11:22 AM ISTUpdated : Dec 16, 2024, 11:28 AM IST

ஏர்டெல் ஆல் இன் ஒன் சலுகையை அறிவித்துள்ளது. இதில் அன்லிமிடெட் அழைப்புகள், அதிவேக டேட்டா, ஓடிடி சந்தா உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் மலிவு விலையில் கிடைக்கிறது.

PREV
15
Airtelன் அசத்தலான 2 ஜிபி ஸ்கீம்: அன்லிமிடட் கால்ஸ், 2ஜிபி டேட்டா - விலை எவ்வளவு தெரியுமா?
Airtel Recharge Scheme

இந்திய தொலைத்தொடர்பு துறையில் தினமும் புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. போட்டியும் அதிகரித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பிஎஸ்என்எல் (BSNL), விஐ (VI) உள்ளிட்ட பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக ஏர்டெல் (Airtel) புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. மலிவு விலையில் அனைத்து வசதிகளையும் ஒன்றாக வழங்குகிறது.

25
Airtel Recharge Scheme

ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி இலவச சந்தா, அழைப்புகள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல வசதிகள் இந்த திட்டத்தில் உள்ளன. இதன் விலை ரூ.398. இதன் மூலம் ஜியோ உள்ளிட்ட பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏர்டெல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

35
Airtel Recharge Scheme

ரூ.398 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தலாம். தினமும் அதிவேக இணையதள சேவை கிடைக்கும். 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும். இதில் விளையாட்டு நேரலை, திரைப்படம் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

45
Airtel Recharge Scheme

ஏர்டெல்லின் புதிய திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகையிலும் உதவும். ஏனெனில் இதில் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஓடிடி தள வசதியும் கிடைக்கும். எனவே ஒரே திட்டத்தில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும். இது ரூ.398 திட்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

55
Airtel Recharge Scheme

ஜியோ சமீபத்தில் புத்தாண்டு திட்டத்தை அறிவித்தது. இது வாடிக்கையாளர்களை ஈர்த்தது. 200 நாட்கள் செல்லுபடியாகும் உள்ளிட்ட பல வசதிகளை ஜியோ வழங்கியது. இதற்கு பதிலடியாக ஏர்டெல் மாதாந்திர திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்தையும் ஒன்றாக வழங்குகிறது.

click me!

Recommended Stories