Flipkart Mobile Offers
நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், பிளிப்கார்ட் (Flipkart) உங்களுக்காக மற்றொரு சூப்பர் வாய்ப்பைக் கொண்டுவந்துள்ளது. பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் (Super Value Days) விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
Flipkart Super Value Days 2024
பிளிப்கார்ட் (Flipkart) சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனை டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை மட்டுமே. இந்தச் சலுகை விற்பனையின்போது சாம்சங், பிக்சல் உள்பட பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை அதிகபட்ச தள்ளுபடியைப் பெறலாம்.
Samsung Galaxy S23 FE
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ. (Samsung Galaxy S23 FE) பிளிப்கார்ட்டின் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் மிகவும் மலிவாக கிடைக்கிறது. இந்த போன் பாதிக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இதன் உண்மையான விலை ரூ.79,999. ஆனால், இதை ரூ. 34,999 விலைக்கு உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
Google Pixel 8a
கூகுளின் விற்பனையில் கூகுள் போன்களும் கம்மி விலையில் கிடைக்கின்றன. இந்த போனை கூகுள் நிறுவனம் 52,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது நீங்கள் அதை வெறும் 36,999 ரூபாய்க்குப் பெறலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மூலம் கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.
CMF by Nothing Phone 1
CMF by Nothing Phone 1 விற்பனையில் ரூ 19,999 க்கு அறிமுகமானது. ஆனால் இப்போது இதை பிளிப்கார்ட் மூலம் ரூ 14,999 க்கு வாங்கிக்கொள்ள முடியும். HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலமாகவும் ரூ.2000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
Motorola Edge 50 Pro 5G
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் ரூ.10,000 க்குக் குறைந்த விலையில் கிடைக்கும். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5G அறிமுகமாகும்போது இதன் விலை ரூ.41,999 ஆக இருந்தது. இப்போது இந்த போனின் விலை ரூ.31,999. ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.2,000 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.
REDMI 13C 5G
இந்தப் பட்டியலில் உள்ள கடைசியாக உள்ள ஸ்மார்ட்போன் REDMI 13C 5G. இது மிகவும் மலிவான விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று. தற்போது இந்த போனின் விலை ரூ.9,199 ஆக உள்ளது.