Amazon Great Freedom Sale: எந்த பொருட்களுக்கு அதிக தள்ளுபடி? வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

Published : Jul 28, 2026, 12:09 PM IST

Amazon Great Freedom Sale: ஆன்லைன் ஷாப்பிங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026 வரும் ஆகஸ்ட் 7 முதல் தொடங்குகிறது.

PREV
14
அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026

இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் ஷாப்பிங் விழாக்களில் ஒன்றான அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026 வரும் ஆகஸ்ட் 7 முதல் தொடங்குகிறது. "எல்லோருக்கும் பெரிய லாபம்" என்ற வாசகத்துடன் அமேசான் இந்த விற்பனை தேதியை அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சேலில் பல்வேறு மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
ஆகஸ்ட் 7 முதல் ஆரம்பம்

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், டேப்லெட்டுகள், இயர்பட்ஸ் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க விலைக் குறைவு இருக்கலாம். குறிப்பாக ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த சேல் முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பெரிய விற்பனையில் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 15 மாடல்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு ஐபோன் 17 சீரிஸ் அல்லது பிற ஆப்பிள் சாதனங்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறது என்பது குறித்து அமேசான் இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று உங்கள் ராசிக்கு வெற்றியா? சவாலா? முழு பலன்கள் படியுங்கள்

34
வங்கிச் சலுகைகள்

இந்த விற்பனையின் மற்றொரு முக்கிய அம்சம் வங்கிச் சலுகைகள். தகுதியுள்ள ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் எளிதான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 5% வரம்பற்ற கேஷ்பேக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ, பழைய சாதனங்களை மாற்றி வாங்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் கூடுதல் கூப்பன்களும் வழங்கப்பட உள்ளன.

44
மொபைல் தள்ளுபடி அறிவிப்பு

அதே நேரத்தில், அனைத்து தயாரிப்புகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று கருதக்கூடாது. சமீபத்தில் ரேம் சிப் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிள், சாம்சங், ஜியோமி, ஒன்ப்ளஸ், நத்திங் போன்ற நிறுவனங்கள் சில தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளன. எனவே, சேல் விலையை மற்ற தளங்களுடன் ஒப்பிட்டு வாங்குவது நல்லது. சிறந்த 100 டீல்கள், பிளாக்பஸ்டர் டீல்கள், டிரெண்டிங் டீல்கள், மேலும் வாங்க மேலும் சேமி, எக்ஸ்சேஞ்ச் மேளா உள்ளிட்ட பல சிறப்பு பிரிவுகளும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 7 முதல் வெளியாகும் அதிகாரப்பூர்வ டீல்களை கவனித்து, தேவையான பொருட்களை சரியான விலையில் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories