நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்; ரூ.11,700க்கு ஐபோன் வாங்கலாம்; நம்ப முடியாத தள்ளுபடி!

அமேசானில் ஐபோன் மாடலுக்கு மெகா தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.11,700 என்ற அதிரடி விலை குறைப்பில் ஐபோன் வாங்க முடியும். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

Amazon is offering a mega discount on the iPhone 14 model ray
நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்; ரூ.11,700க்கு ஐபோன் வாங்கலாம்.. நம்ப முடியாத தள்ளுபடி!

இந்தியாவில் பெரும்பாலனவர்கள் 'நாமும் ஒரு ஐபோன் வாங்க வேண்டும்' என்பதை நீண்டநாள் ஆசையாக வைத்திருக்கின்றனர். இந்தியாவில் ஐபோன் வைத்திருப்பது பெரும் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால் இந்த போனை வாங்க வேண்டும் என்ற கனவில் நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய ஆன்லைன் விற்பனை தளங்கள் அதிரடி சலுகையை அளிக்கின்றன.

Amazon is offering a mega discount on the iPhone 14 model ray
ஐபோன்களுக்கு தள்ளுபடி

அந்த வகையில் அமேசான் நிறுவனம் 'ஐபோன் 14' 256 ஸ்டோரேஜ் மாடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது 'ஐபோன் 14' 256 ஸ்டோரேஜ் மாடலுக்கு அமேசானில் 19% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.79,900 என்ற விலைக்கு அறிமுகமான இந்த போனை ரூ.64,900க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதலாக ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஏர்டெல், ஜியோவை தரை மட்டத்திற்கு இறங்கி அடித்த BSNL: ரூ.99ல் அட்டகாசமான சேவை அறிமுகம்


அமேசானில் ஐபோன்களுக்கு தள்ளுபடி

இதுமட்டுமின்றி எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் உங்களிடம் நல்ல முறையில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன்களை ரூ.53,200 வரையில் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள முடியும். இந்த தள்ளுபடி,  எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது நீங்கள் வெறும் ரூ.11,700க்கு ஐபோன் 14 மாடலை வாங்கிக் கொள்ள முடியும்.உங்களால் எக்ஸ்சேஞ்ச் சலுகை பெற முடியாவிட்டாலும், அதிக பணம் கொடுத்து ஐபோனை வாங்க முடியவில்லை என்ற நிலை இருந்தாலும் கவலையை விடுங்கள்.

ஏனெனில் அமேசானில் மாதத்திற்கு ரூ.2,924 இல் தொடங்கும் எளிதான EMIமூலம் ஐபோனை உங்கல் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதேபோல் ஐபோன் 14 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு அமேசானில் 21% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.69,600 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.54,900க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியும் பெறலாம்.

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் அம்சங்களை பொறுத்தவரை 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLEDடிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த செயல்திறன் வழங்கும் ஆப்பிள் A15 பயோனிக் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6GB வரை ரேம் மற்றும் 512GBஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. கேமராக்களை பொறுத்தவரை இரட்டை 12MP + 12MP பின்புற கேமராக்கள் மற்றும் 12MPசெல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 15W பாஸ்ட் சார்ஜிங்குடன் 3279mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் சிம் வச்சிருக்கீங்களா? மொபைலில் 450+ டிவி சேனல்கள் இலவசம்; என்ஜாய் பண்ணுங்க!

Latest Videos

click me!