Published : Jan 11, 2025, 09:02 PM ISTUpdated : Jan 25, 2025, 12:48 PM IST
அமேசான் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ப்ளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது. இதில் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
இதனால் அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையை எப்போது அறிவிக்கும்? என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது அது குறித்த அறிவிப்பை அமேசான் வெளியிட்டுள்ளது.
24
OnePlus 13 Series Smartphone
அதிரடி தள்ளுபடி
அமேசானின் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13ம் தேதி தொடங்குகிறது. அதே வேளையில் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு குடியரசு தின சிறப்பு விற்பனை ஒருநாள் முன்னதாகவே தொடங்கும். ப்ளிப்கார்ட்டை போலவே அமேசானின் குடியரசு தின சிறப்பு விற்பனையிலும் ஐபோன் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வாரி வழங்கப்பட உள்ளது.
OnePlus 13 சீரிஸ் போன்கள்
அமேசானின் சிறப்பு விற்பனையில் OnePlus 13 சீரிஸ் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்படுகிறது. அதாவது OnePlus 13 வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வங்கி தள்ளுபடியும், OnePlus 13R வாங்குபவர்களுக்கு ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். OnePlus 13 மாடல் ரூ.69,999 என்ற விலையிலும், OnePlus 13R மாடல் ரூ.42,999 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஐபோன்களுக்கும் அதிக தள்ளுபடி கிடைக்கும். iPhone 15 மாடல் ரூ.60,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமேசானில் இந்த போன் ரூ.60,499க்கு விற்கப்படுகிறது. இதேபோல் iPhone 16 விலையிலும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.
44
Flipkart Republic Day Sale 2025
கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட்
இது மட்டுமின்றி Redmi A4, Samsung Galaxy S23 Ultra, Oppo F27 Pro+, OnePlus 13 Neo, OnePlus 13, iPhone 15, iQOO Z9s, OnePlus Nord 4, OnePlus 13R உள்பட அனைத்து மாடல் போன்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும், கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். கிப்ட் வவுச்சர்களும் பெறலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.