Poco X7 Pro
1. போக்கோ X7 ப்ரோ (Poco X7 Pro)
போக்கோ X7 ப்ரோ போனில் 6.73 இன்ச் AMOLED தட்டையான திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே அதிகபட்சம் 3200 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 1.5K தெளிவுத்திறனுடன், சிறந்த தெரிவுநிலையை வழங்குகிறது. 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதம் மற்றும் கேமிங்கிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உடனடி 2560 ஹெர்ட்ஸ் விகிதத்துடன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தை செயல்படுத்துகிறது.
இந்த மாடலில் 8400 அல்ட்ரா மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். சாலிட் எலக்ட்ரோலைட் தொழில்நுட்பத்துடன் கூடிய 6550mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி ஃபோனுக்கு சக்தி அளிக்கிறது. 90W ஹைப்பர்சார்ஜுஸ் வசதியுடன் சுமார் 47 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
Oneplus nord CE 4
2. ஒன்பிளஸ் நோர்ட் CE 4 (oneplus nord CE 4 )
ஒன்பிளஸ் நோர்ட் CE4 மாடலில் 2412 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு விகிதத்தைக் கொண்ட 6.7-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் CE 4 5G அட்ரினோ 720 GPU மற்றும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 SoC சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் CE4 மாடலில் இரண்டு கேமராக்கள் உள்ளன: அதாவது 8MP சோனி IMX355 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் OIS உடன் 50MP சோனி LYT600 பிரைம் சென்சார் கேமராக்கள வழங்கப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி எடுக்க 16MP முன் கேமரா உள்ளது. இதன் விலை ரூ.22,990 ஆகும்.
Infinix GT 20 Pro
3. இன்ஃபினிக்ஸ் GT 20 ப்ரோ (Infinix GT 20 Pro)
இன்ஃபினிக்ஸ் GT 20 ப்ரோ மாடலின் 6.78-இன்ச் டிஸ்பிளே முழு HD+ LTPS AMOLED திரை 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் மற்றும் 1300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக மாலி G610-MC6 சிப்செட் கூடுதலாக மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமிங் டிஸ்ப்ளே ப்ராசசரான Pixelworks X5 டர்போ, GPU வேகம், தெளிவுத்திறன் மற்றும் தாமதத்தை மேம்படுத்துகிறது. இது 45W பாஸ்ட் சார்ஜ்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனால் போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். இந்த போனில் 108எம்பி மெயின் கேரமாவும், 32எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.22,999ல் இருந்து தொடங்குகிறது.
Redmi Note 14 pro
4. ரெட்மி நோட் 14 ப்ரோ (redmi note 14 pro)
ரெட்மி நோட் 14 ப்ரோ போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு மற்றும் 3,000 நிட்ஸ் பிரைட்னஸூடன் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே உள்ளது. சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் வழங்கப்பட்டுள்ளதால் போனுக்கு அதிக செயல்திறன் கிடைக்கிறது. கேமராக்களை பொறுத்தவரை OIS உடன் 50MP சோனி LYT 600 பிரைம் சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கேமராக்கள் உள்ளன. 45W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்பெக்ட்ரம் ப்ளூ, டைட்டன் பிளாக் மற்றும் பேண்டம் பர்பிள் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனின் விலை ரூ.24,499.
Motorola Edge 50 neo
5. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (motorola edge 50 neo )
மோட்டோ எட்ஜ் 50 நியோவில் 3,000 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz தகவமைப்பு புதுப்பிப்பு விகிதம், 1.5K தெளிவுத்திறன் மற்றும் HDR10+க்கான இணக்கத்தன்மை கொண்ட 6.4-இன்ச் LTPO டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் தாசி பாதுகாப்பிற்காக IP68 தரத்தைக் கொண்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ராசசர் சிப்செட் போனை விரைவாக செயல்பட வைக்கிறது. மோட்டோ எட்ஜ் 50 நியோவில் டிரிபிள் பின்புற கேமரா உள்ளது. இதில் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ், 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50MP பிரைம் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.20,999 ஆகும்.
Nothing Phone 2a
6. நத்திங் ஃபோன் 2a (Nothing Phone 2a)
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இந்த இன்னும் பல வலுவான அம்சங்களைக் கொண்ட மிட்-ரேஞ்சர் போனாக கருதப்படுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் கொண்டுள்ளது. 128 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. டூயல் கேமரா சிஸ்டம் கொண்ட இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 mAh பேட்டரியும் பெற்றுள்ளது.. இந்த போனின் விலை ரூ.23,999ல் இருந்து தொடங்குகிறது.
Samsung Galaxy A35
7. சாம்சங் கேலக்ஸி A35 (Samsung Galaxy A35)
சாம்சங் கேலக்ஸி A35ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 50MP + 8MP + 5MP மெயின் கேமரா, 13 எம்பி செல்பி கேமராக்கள் உள்ளன. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்ட் சார்ஜிங் வழங்கும் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.26,249 ஆகும்.