Airtel Rs 200 Plan: ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும்.. அன்லிமிடெட் 5ஜி, 18+ OTT இலவசம்!

Published : Jul 14, 2026, 07:07 AM IST

Airtel Rs 200 Plan: குறைந்த செலவில் அதிக டேட்டாவும், ஓடிடி பொழுதுபோக்கும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏர்டெல் ரூ.200 மதிப்புள்ள புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
15
ஏர்டெல்லின் புதிய ரூ.200 டேட்டா வவுச்சர்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதிக டேட்டா மற்றும் ஓடிடி வசதிகளை விரும்பும் பயனர்களுக்கு புதிய ரூ.200 ஆட்-ஆன் டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதால், பயனர்கள் ஏற்கனவே ஏர்டெல்லின் ஒரு பேஸ் ரீசார்ஜ் பிளானை வைத்திருக்க வேண்டும்.

25
என்னென்ன சலுகைகள்?

இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் வசிக்கும் மற்றும் 5ஜி மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. 30ஜிபி டேட்டா முடிந்த பிறகு, கூடுதல் டேட்டாவிற்கு MB-க்கு 50 காசு கட்டணம் வசூலிக்கப்படும்.

35
ஓடிடி ரசிகர்களுக்கு கூடுதல் பலன்

இந்த ரூ.200 திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு அதன் ஓடிடி சலுகைகளாகும். பயனர்களுக்கு 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் மூலம் சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களின் உள்ளடக்கங்களை கூடுதல் கட்டணமின்றி பார்க்கும் வசதியும் கிடைக்கிறது.

45
ஜியோவுடன் ஒப்பீடு

ஜியோவும் இதே விலையில் ரூ.200 ஓடிடி டேட்டா திட்டம். அதிலும் 30ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி சலுகைகள் உள்ளன. இருப்பினும், ஏர்டெல் தனது எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் மூலம் அதிக ஓடிடி தளங்களை வழங்குவதாகக் கூறுகிறது. இதனால் ஓடிடி உள்ளடக்கங்களை அதிகமாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏர்டெல் திட்டம் கூடுதல் மதிப்பை வழங்கக்கூடும்.

55
ரூ.200 ஆட்-ஆன் திட்டம்

ஏற்கனவே ஏர்டெல் அடிப்படை திட்டத்தை பயன்படுத்துபவர்கள், அதிக டேட்டா தேவைப்படுபவர்கள் மற்றும் ஓடிடியை அடிக்கடி பார்ப்பவர்கள் இந்த ரூ.200 ஆட்-ஆன் திட்டத்தை பரிசீலிக்கலாம். ஆனால் இது புதிய அடிப்படை ரீசார்ஜ் அல்ல, கூடுதல் டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories