இந்தியாவைப் போலவே இன்னொரு நாட்டிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

First Published | Feb 28, 2023, 1:19 PM IST

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, கனடாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலி மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த முறை கனடா நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்களன்று, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த அச்சுறுத்தல் காரணமாக, அரசாங்கம் வழங்கிய சாதனங்களில் TikTok பயன்படுத்த தடை விதிப்பதாக கனடா அறிவித்தது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான அபாயம் இருப்பதால் இந்த செயலி தடை செய்யப்படுவதாக கனேடிய அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
 

TikTok

இந்த செயலி சீன நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதாலும், பயனர் தரவுகளை சீன அரசாங்கம் அணுகலாம் என்ற அச்சம் இருப்பதாலும் தடை செய்யப்பட்டது. கனேடியர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் மேலும் TikTok ஐ தடை செய்வது என்பது அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். கனேடியர்களுக்கான ஆன்லைன் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் எடுக்கும் பல நடவடிக்கைகளில் இந்தத் தடை முக்கியமாக பார்க்கப்படுகிறது.
 

Tap to resize

இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும், இதனால் கனேடிய அரசாங்க ஊழியர்கள் இனி எதிர்காலத்தில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்த செயலியயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் இருந்தாலும், அரசாங்கத் தகவல்களை டிக்டாக் செயலி உளவு செய்ததற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை என்று கருவூல வாரியத் தலைவர் மோனா ஃபோர்டியர் கூறியுள்ளார்.

புதிய Twitter CEO அதிகாரியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!

டிக்டாக் தடையானது கனேடிய அரசாங்கத்தின் தகவல்கள், தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும், அத்துடன் சீன அரசாங்கத்தால் பயனர் தரவை தவறாகப் பயன்படுத்திவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இருக்கலாம்.

முடிவில், அரசாங்கம் வழங்கிய சாதனங்களில் TikTok ஐ தடை செய்வதற்கான கனடாவின் முடிவானது டிக்டாக் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஆகும். ஏற்கெனவே இந்தியா போன்ற பெரிய நாட்டில் டிக்டிாக் தடை விதிக்கப்பட்டதால், அந்நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. தற்போது அதே போல் கனடாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தும் பழக்கமே முக்கிய காரணம்.

Latest Videos

click me!