AI தெரியலனா புரமோஷன் கிடையாது! 11,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய அக்சென்சரின் புதிய ரூல்ஸ்

Published : Feb 21, 2026, 10:58 PM IST

Accenture ஐடி துறையில் பெரும் அதிர்ச்சி! 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள அக்சென்சர் நிறுவனம், ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே இனி பதவி உயர்வு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. முழு விவரங்களை இங்கே படியுங்கள்.

PREV
15
Accenture

தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்த மாற்றம் பல ஐடி ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்துள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்சர் (Accenture), கடந்த சில ஆண்டுகளில் சுமார் 11,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளதோடு, தற்போது ஊழியர்களுக்கு இன்னொரு அதிர்ச்சிகரமான நிபந்தனையையும் விதித்துள்ளது.

"இனிமேல் ஏஐ (AI) டூல்ஸை திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நிறுவனத்தில் பதவி உயர்வு (Promotion) வழங்கப்படும்" என அக்சென்சர் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

25
AI தெரிந்தால் மட்டுமே புரமோஷன்!

இது குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அக்சென்சரின் அசோசியேட் டைரக்டர்கள் (Associate Directors) மற்றும் மூத்த மேலாளர்களுக்கு (Senior Managers) ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பது இனி உங்களின் விருப்பம் சார்ந்த விஷயம் அல்ல; அது உங்கள் பதவி உயர்வைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக மாற்றப்பட்டுள்ளது" என்று நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், "நீங்கள் ஏஐ-யை பயன்படுத்தவில்லை என்றால், உங்களுக்குப் புரமோஷன் கிடைக்காது" என்பதே அதன் அர்த்தம்.

35
ஏன் இந்த 11,000 பேர் பணிநீக்கம்?

ஏஐ-யை மையமாகக் கொண்ட வேலைகளுக்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியாத சுமார் 11,000 பேரை அக்சென்சர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கைகளுக்காகவே (Severance packages) சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் செலவிட்டுள்ளது.

"நிறுவனங்கள் ஏஐ யுகத்தில் தரம் குறையாமல் போட்டிபோட வேண்டும் என்றால், தங்களின் வேலை செய்யும் முறைகளையும், குழுக்களையும் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்" என அக்சென்சரின் சிஇஓ (CEO) ஜூலி ஸ்வீட் (Julie Sweet) சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏஐ இம்பேக்ட் உச்சிமாநாட்டில் (India AI Impact Summit) வெளிப்படையாகத் தெரிவித்தார்.

45
கண்காணிக்க வரும் ஏஐ டூல் (AI Refinery)

ஊழியர்கள் உண்மையிலேயே தங்களின் அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் அக்சென்சர் ஏற்பாடு செய்துள்ளது. என்விடியா (NVIDIA) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'ஏஐ ரிஃபைனரி' (AI Refinery) உள்ளிட்ட தங்களின் இன்டெர்னல் டூல்ஸில் (Internal Tools), ஊழியர்கள் எவ்வளவு நேரம் லாக்-இன் (Log-ins) செய்திருக்கிறார்கள், எந்த அளவுக்கு ஏஐ-யை பயன்படுத்துகிறார்கள் என்ற தரவுகளை நிறுவனம் தீவிரமாகக் கண்காணிக்கப் போகிறது.

எனினும், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத் திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும், சில விதிமுறைகள் காரணமாக இந்த தீவிர கண்காணிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

55
ஐடி துறை முழுவதும் நடக்கும் மாற்றம்!

அக்சென்சர் மட்டுமல்ல; பல முன்னணி டெக் நிறுவனங்களும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன.

• மைக்ரோசாப்ட் (Microsoft): 2025-ம் ஆண்டு முதல் ஏஐ பயன்பாடு கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.

• கூகுள் (Google): ஏஐ-யை தவிர்க்கும் ஊழியர்கள் பின்தங்கி விடுவார்கள் என சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார்.

• மெட்டா (Meta): ஊழியர்களின் ஏஐ பயன்பாட்டைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அமேசான், டிசிஎஸ் (TCS), இன்போசிஸ் (Infosys), அக்சென்சர் உள்ளிட்ட நிறுவனங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஐடி வேலைகள் பறிபோயுள்ளன. ஏஐ தொழில்நுட்பம் வேலைகளை எளிதாக்குவதால், அதிக ஆட்கள் தேவையில்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ஐடி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?

அக்சென்சரின் இந்த விதிமுறை தற்போதைக்கு ஆரம்பநிலை (Entry-level) ஊழியர்களுக்குப் பொருந்தாது என்றாலும், எதிர்காலத்தில் ஐடி துறையில் வேலைக்குச் சேரவோ அல்லது வேலையில் முன்னேறவோ 'ஏஐ ஸ்கில்ஸ்' (AI Skills) மிகவும் அவசியமாகிவிட்டது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. காலத்திற்கு ஏற்ப உங்களை அப்டேட் செய்துகொண்டால் மட்டுமே ஐடி துறையில் நீடிக்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories