Tamil

ஸ்மார்ட்போன்: இந்த தவறுகளால் உங்கள் போன் பேட்டரி வீணாகிறதா?

Tamil

இரவு முழுவதும் சார்ஜ் செய்வது

நம்மில் பலர் இரவில் தூங்கும்போது போனை சார்ஜில் போட்டுவிட்டு, காலை வரை அப்படியே விட்டுவிடுவோம். இதனால் போன் ஓவர்ஹீட் ஆகி, பேட்டரியின் திறன் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.

Image credits: stockPhoto
Tamil

20% முதல் 80% வரை பராமரிப்பது நல்லது

போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகும் வரை பயன்படுத்துவது தவறு. இது லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். எப்போதும் பேட்டரியை 20% முதல் 80% வரை பராமரிப்பது நல்லது.

Image credits: Our own
Tamil

சார்ஜ் செய்யும் போது கேம்ஸ், போன் பேசுவதா?

போனை சார்ஜ் செய்யும் போது கேம்ஸ் விளையாடுவது, போன் பேசுவது போன்ற செயல்களால் பிராசஸர் மற்றும் பேட்டரி அதிக வெப்பத்தை வெளியிடும். இது போன் ஹேங் ஆவதற்கும் ஒரு முக்கிய காரணம்.

Image credits: Getty
Tamil

மலிவான சார்ஜர்கள்

ஒரிஜினல் சார்ஜர் பழுதாகிவிட்டால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்று போலி சார்ஜர்களை வாங்குகிறோம். ஆனால், அவை போனுக்குத் தேவையான சரியான வோல்டேஜை வழங்காது. இது பேட்டரியை பாதிக்கும்.

Image credits: freepik
Tamil

உங்கள் போன் பாதுகாப்பு உங்கள் கையில்

இந்த 4 சிறிய தவறுகளைத் தவிர்த்தால், உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி நீண்ட காலத்திற்குப் புதியது போலச் செயல்படும். உங்கள் போனின் பாதுகாப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது.

Image credits: Gemini

Flipkart-ல் iPhone 17 Pro Max- க்கு அதிரடி தள்ளுபடி!

WhatsApp CarPlay update: நேரடியாக Message, Call செய்யலாம்!

பனிக்கட்டியை இப்படி செய்தால் மின்சாரம் தயாரிக்கலாம்

இருண்டு வரும் கடல்களால் பூமிக்கு ஆபத்தா?