ரூ.15,000-க்குள் 5 சிறந்த 5ஜி போன்கள்! 6,300mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே என அசத்தல் வசதிகள்!

Published : Nov 09, 2026, 08:21 PM IST

ஸ்மார்ட்போன் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், குறைந்த பட்ஜெட்டில் புதிய 5ஜி போன் வாங்குவது எப்படி? 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.15,000-க்குள் கிடைக்கும் டாப் 5 போன்களின் விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் விலை மட்டுமின்றி பேட்டரி திறன், கேமரா, நினைவகம், இணைய வேகம் உள்ளிட்ட வசதிகளையும் கவனிக்கின்றனர். குறிப்பாக ரூ.15,000 பட்ஜெட்டில் 5ஜி இணைப்பு கொண்ட போன்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த விலைப் பிரிவில் ஹெச்எம்டி, ஏஐ பிளஸ், லாவா, போக்கோ, சாம்சங் நிறுவனங்களின் மாடல்களைக் கவனிக்கலாம். இவற்றில் சில போன்களில் 6,000mAh-க்கும் அதிகமான பேட்டரி, 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே போன்ற வசதிகள் உள்ளன. தற்போது கிடைக்கும் விலைகள் விற்பனையாளர், நிறம், ஸ்டோரேஜ் அளவு மற்றும் வங்கி சலுகைகளைப் பொறுத்து மாறுபடலாம்.

24
லாவா போல்டு N2 மற்றும் போக்கோ C85X

லாவா போல்டு N2 5ஜி போனில் 6,000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, IP64 பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவை உள்ளன. 4GB ரேம், 128GB நினைவக மாடலின் விலை ரூ.13,998 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்கோ C85X 5ஜி மாடலில் 6,300mAh பேட்டரி, 6.9 அங்குலத் டிஸ்பிளே, 120Hz புதுப்பிப்பு வீதம், 32MP பின்புற கேமரா, 8MP முன்புற கேமரா ஆகியவை வழங்கப்படுகின்றன. யுனிசாக் T8300 செயலி இதில் இடம்பெற்றுள்ளது. இதன் 4GB ரேம், 64GB நினைவக மாடலின் நவம்பர் 7 விலைப் பட்டியலில் ரூ.13,689 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

34
ஹெச்எம்டி மற்றும் ஏஐ பிளஸ்

ஹெச்எம்டி வைபே 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி, 50MP பின்புற கேமரா, 8MP முன்புற கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. 4GB ரேம், 128GB நினைவக மாடலின் விலை சுமார் ரூ.13,999 என நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி மாடலில் 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 8MP செல்ஃபி கேமரா, 120Hz டிஸ்பிளே ஆகியவை உள்ளன. யுனிசாக் T8200 செயலி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4GB ரேம், 64GB ஸ்டோரேஜ் மாடலின் தற்போதைய விலை சுமார் ரூ.11,999.

44
சாம்சங் கேலக்ஸி A06 5ஜி

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A06 5ஜி மாடலையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 செயலி, 6.7 அங்குலத் டிஸ்பிளே, 50MP முதன்மைக் கேமரா, 2MP ஆழத்தைக் கணக்கிடும் கேமரா மற்றும் 8MP முன்புற கேமரா ஆகியவை உள்ளன. 5,000mAh பேட்டரியுடன் 25W வேக சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் 4GB ரேம், 64GB நினைவக மாடலின் விலை சுமார் ரூ.14,969 முதல் ரூ.14,980 வரை விற்பனைத் தளங்களில் காணப்படுகிறது. இதன் விலை சில விற்பனைத் தளங்களில் ரூ.15,000-ஐத் தாண்டவும் வாய்ப்புள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories