குரோம் பிரவுசரில் சூப்பர் பவர் வேணுமா? இந்த AI எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் பண்ணிக்கோங்க!

First Published | Aug 15, 2024, 4:55 PM IST

கூகுள் குரோம் பயன்படுத்தும் பலர் எக்ஸ்டென்ஷன்களை சரியாக பயன்படுத்துவது இல்லை. எக்ஸ்டென்ஷன்களை இணைப்பதன் மூலம் குரோம் பிரவுசரை பயன்படுத்துவது எளிமையாக இருக்கும். இத்தொகுப்பில் சில பயனுள்ள எக்ஸ்டென்ஷ்களைப் பார்க்கலாம்.

Google Chrome AI Extensions

கூகுள் குரோம் பயன்படுத்தும் பலர் எக்ஸ்டென்ஷன்களை சரியாக பயன்படுத்துவது இல்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட AI எக்ஸ்டென்ஷன்களை இணைப்பதன் மூலம் குரோம் பிரவுசரை பயன்படுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும். அந்த வகையில் சில பயனுள்ள எக்ஸ்டென்ஷ்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Scribe AI Extensions

Scribe - இது ஒரு ஸ்கிரீன் ரெக்கார்டர் எக்ஸ்டென்ஷன். கூகுள் குரோமில் வீடியோ டுடோரியல்களை எளிமையாக உருவாக்க இது உதவுகிறது. இதன் மூலம் உருவாக்கிய வீடியோவை எளிமையாக ஷேர் செய்யவும் முடியும்.

Tap to resize

Monica AI Extensions

சாட் ஜிபிடி-4, கிளாட், பார்டு போன்ற AI மாடல்களின் ஆற்றலை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் AI அசிஸ்டெண்ட் தான் இந்த எக்ஸ்டென்ஷன். தேடல், எழுத்து, மொழிபெயர்ப்பு என பல தேவைகளுக்கு பயன்படக்கூடியது.

Wordtune AI Extensions

தொழில்முறை எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளை செம்மைப்படுத்த இந்த AI எக்ஸ்டென்ஷன் பயனுள்ள கருவியாக இருக்கும். இதன் மூலம் எழுத்துகளில் உள்ள இலக்கணத்தை எளிமையாகத் திருத்தலாம். மேம்படுத்தலாம்.

Speechyfiy AI Extensions

இந்த AI எக்ஸ்டென்ஷன் எழுத்துகளை குரலாக மாற்றிக் கொடுக்கிறது. வீடியோக்களுக்கு வாய்ஸ் ஓவர் ரெக்கார்டு செய்ய அவசியமே இல்லை. எழுத்து வடிவில் இருக்கும் கேப்ஷனை ஒலி வடிவில் மாற்ற முடியும்.

Perplexity AI Extensions

இது ஒரு வித்தியாசமான சாட்போட். எந்த தலைப்பில் கேள்வி கேட்டாலும் ஆதாரபூர்வமான பதில்களை மட்டுமே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு இது கைகொடுக்கும்.

Bonjourr AI Extensions

மினிமலிஸ்ட் வடிவமைப்பில் கூகுள் குரோம் முகப்புப் பக்கத்தை வடிவமைக்க இந்த எக்ஸ்டென்ஷனை முயற்சி செய்யலாம். ஹோம் பேஜை கவனச்சிதறல் ஏற்படாத வகையில் அமைத்துக்கொள்ள இது உதவும்.

Alicent AI Extensions

சாட்ஜிபிடியின் திறனை மேம்படுத்த இந்த AI எக்ஸ்டென்ஷனை இணைத்துக்கொள்ளலாம். எந்த சூழலுக்கும் ஏற்ற எழுத்தாக்கங்களை கச்சிதமாக உருவாக்க இந்த எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தலாம்.

Latest Videos

click me!