என்னது ரூ.399க்கு 3300ஜிபி டேட்டாவா.. இனி BSNL-லை கையிலேயே பிடிக்க முடியாது.. செம பிளான்..

First Published | Aug 13, 2024, 8:15 AM IST

ரூ.399க்கு 3300ஜிபி டேட்டாவை தருகிறது பிஎஸ்என்எல்லின் சிறப்புத் திட்டம். இந்த திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

BSNL Best Plan

இந்தியாவின் அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது.

BSNL

இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 25 முதல் 35% வரை அதிகரித்துள்ளது. இது தொலைத்தொடர்பு பயனர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்துயது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த காலகட்டத்தை தனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாக கருதி, பவுண்டரி அடித்து வருகிறது. விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களால் வருத்தம் அடைந்த மற்றும் ஏமாற்றமடைந்த பயனர்களுக்குபிஎஸ்என்எல் மலிவான திட்டங்களின் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கியது.

Tap to resize

BSNL Special Plan

அதுமட்டுமில்லாமல் மேலும் பிஎஸ்என்எல் அதன் இணைப்பை மேம்படுத்த வேகமாக செயல்படத் தொடங்கி இருக்கிறது. இப்போது பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள திட்டத்தில் இதில் வாடிக்கையாளர்கள் 100, 200 அல்லது 500 ஜிபி அல்ல, முழு 3300 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதன் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இது பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டமாகும். இது முன்பு ரூ. 499 ஆக இருந்தது.

Bsnl broadband plans

ஆனால் BSNL இந்த திட்டத்தின் விலையை ரூ.100 குறைத்துள்ளது.  இப்போது பயனர்கள் இந்த சிறந்த பிராட்பேண்ட் திட்டத்திற்கு ரூ. 399 மட்டுமே செலவழிக்க வேண்டும். 3300ஜிபி டேட்டா. இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். அதாவது பிஎஸ்என்எல்-ன் இந்த ரூ.399 பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 110GB டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

Bsnl fiber broadband plans

இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான இணைய பயனர்களுக்கு போதுமான டேட்டாவாகும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகமோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் 2.5 ஜிபி டேட்டா.. இந்தியர்கள் எல்லாரும் வாங்குவாங்க.. முகேஷ் அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Latest Videos

click me!